close
Choose your channels

சரக்கடித்து பார்ட்டியில் செம டான்ஸ் ஆடும் ராஷ்மிகா மந்தனா: வீடியோ வைரல்

Saturday, September 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ராஷ்மிகா சரக்கு அடித்துவிட்டு பார்ட்டியில் கவர்ச்சி உடையுடன் செம டான்ஸ் ஆடும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா என்பதும் தற்போது அவர் விஜய்யுடன் நடித்து வரும் ’வாரிசு’ திரைப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான் ராஷ்மிகா முதல்முதலாக பாலிவுட்டில் என்ட்ரி ஆகியுள்ள திரைப்படம் 'குட்பை’. அமிதாபச்சன் முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தில் ராஷ்மிகா நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் இந்த படம் வரும் அக்டோபர் 7ஆம் தேதி வெளியாக உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் வீடியோவை ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் சரக்கடித்துவிட்டு பார்ட்டியில் தோழிகளுடன் செம டான்ஸ் ஆடும் காட்சிகள் உள்ளதை அடுத்து இந்த வீடியோவுக்கும் 5 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் குவிந்துள்ளது. ராஸ்மிகா பாலிவுட்டில் வேற லெவல் கவர்ச்சி காட்டுவது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளதாக கூறப்படுகிறது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.