முதல்முறையாக ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணையும் பிரபல ஹீரோ: மும்பை நிறுவனத்தின் கதையா?

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் முதல் முறையாக பிரபல ஹீரோ ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளதால் போலிவுட்டு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அஜித் நடித்த ‘தீனா’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். அதன்பின்னர் விஜய் நடித்த ‘துப்பாக்கி’, ‘கத்தி’, சூர்யா நடித்த ‘ஏழாம் அறிவு’ ‘கஜினி’ உள்பட பல பிரபலங்களின் படத்தை இயக்கினார் என்பதும், தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடிக்க உள்ளதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே முதல் முறையாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் கதை ஒரு மும்பை நிறுவனத்தின் கதை என்றும் சிம்பு இந்த படத்தில் தொழிலதிபராக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் சிம்பு ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கணவருக்கு பாதபூஜை செய்த சூர்யா-கார்த்தி பட பிரபல நடிகை: எதற்காக தெரியுமா?

சூர்யா, கார்த்தி படங்கள் உட்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகை தனது கணவருக்கு பாத பூஜை செய்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள்

சிம்புவின் 'பத்து தல' படத்தின் சூப்பர் அப்டேட்: ரசிகர்கள் குஷி

சிம்பு நடித்த வந்த 'பத்து தல' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பது தெரிந்ததே. இந்த மாதம் ஆரம்பத்தில் இந்தப் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்த நிலையில்

கமல்ஹாசன் - உதயநிதி படத்தின் கதை இதுவா? ஆச்சரிய தகவல்

 உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் உதயநிதி நடிப்பில் உருவாகயிருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் வெளியானது

எப்போது கடைசியாக உடலுறவு கொண்டீர்கள்: பிரபல நடிகரிடம் கேள்வி கேட்ட தொகுப்பாளர்!

பிரபல நடிகரிடம் எப்போது நீங்கள் கடைசியாக உடலுறவு கொண்டீர்கள் என தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு அந்த நடிகருக்கு பதிலளிக்க விரும்பவில்லை

தனுஷூக்கு இந்த திறமையும் உண்டா? நடிகர் பிரசன்னா வெளியிட்ட ஆச்சரிய வீடியோ

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், நடிகர் மட்டுமின்றி தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பல்வேறு அவதாரங்களில் ஜொலித்து இருக்கிறார்