close
Choose your channels

சிம்புவின் 'பத்து தல' படத்தின் சூப்பர் அப்டேட்: ரசிகர்கள் குஷி

Thursday, July 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடித்த வந்த ’பத்து தல’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பது தெரிந்ததே. இந்த மாதம் ஆரம்பத்தில் இந்தப் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்த நிலையில் திடீரென சிம்புவின் தந்தை டி ராஜேந்தருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தந்தையின் சிகிச்சைக்காக சிம்பு அமெரிக்கா செல்ல வேண்டி இருந்தது. இதன் காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போனது.

இந்த நிலையில் சிம்பு சமீபத்தில் இந்தியா திரும்பிய நிலையில் ‘பத்து தல’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு மைசூரில் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படப்பிடிப்பில் சிம்பு, கவுதம் கார்த்திக் மோதும் சண்டை காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருவதாகவும் இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.

சிம்பு, கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன், மனுஷ்யபுத்திரன் உட்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சூர்யா-ஜோதிகா நடித்த ’சில்லுனு ஒரு காதல்’ படத்தை இயக்கிய கிருஷ்ணா இந்த படத்தை இயக்கி வருகிறார் என்பதும், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.