close
Choose your channels

முதல் ஓப்பன் நாமினேஷன்: இந்த வார டார்கெட் இவரா?

Monday, February 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இரண்டாவது வாரமாக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் ஓப்பன் நாமினேஷன் நடைபெறும் என பிக் பாஸ் அறிவித்துள்ளார். இந்த சீசனின் முதல் ஓபன் நாமினேஷனில் போட்டியாளர்கள் இரண்டு சக போட்டியாளர்களை நாமினேஷன் செய்துள்ள காட்சி இன்றைய புரமோஷன் வீடியோவில் உள்ளது.

ஓப்பன் நாமினேஷன் என்று பிக்பாஸ் கூறியதும் போட்டியாளர்களின் முகம் மாறுவதை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. முதலாவதாக அபிநயை நிரூப் மற்றும் ஷாரிக் ஆகியோர் நாமினேஷன் செய்கின்றனர். அதேபோல் தாமரை, சுஜா, அபிராமி ஆகியோர் சுஜாவை நாமினேட் செய்கின்றனர்.

இதனை அடுத்து பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் இந்த வாரம் டார்கெட் செய்யப்படுபவர் ஜூலி போல் தெரிகிறது. பாலாஜி முருகதாஸ்,தாடி பாலாஜி, வனிதா உள்பட ஏழு பேர் ஜூலியை நாமினேட் செய்கின்றனர். ஜூலி மிகவும் சேஃப் கேம் விளையாடுவதாக கிட்டத்தட்ட அனைவருமே குற்றம்சாட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த வார ஓபன் நாமினேஷனில் ஜூலி டார்கெட் செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் இந்த வாரம் வெளியேறுவாரா? அல்லது காப்பாற்றப்படுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment