விஜய்யின் 'பிகில்' போஸ்டரில் ஹாலிவுட் கனெக்சன்: யாராவது இதை கவனித்தீர்களா?

  • IndiaGlitz, [Saturday,June 22 2019]

தளபதி விஜய்யின் 'பிகில்' பட போஸ்டர்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து விஜய் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் மூழ்கடித்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் ஹாலிவுட் கலைஞர் ஒருவரும் சர்வதேச கால்பந்து விளையாட்டு வீரர் ஒருவரும் பணிபுரிந்துள்ளனர். இந்த இருவரின் பெயர்களும் நேற்றும், இன்றும் வெளியாகியுள்ள போஸ்டரில் உள்ளது. இதனை யாராவது கவனித்தீர்களா?

'பிகில்' படத்தில் பணிபுரியும் ஹாலிவுட் கலைஞர் எமி மெக்டேனியல் (AMEE McDANIEL). இவர் ஹாலிவுட்டில் வெளிவந்த ஸ்போர்ட்ஸ் படங்களான 'பீலே', 'மில்லியன் டாலர் ஆர்ம், 'ஜாம் அண்ட் ஜில்', 'சூப்பர்மேன் ரிட்டர்ன்ஸ்' போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார்.

அதேபோல் இந்த படத்தில் பணிபுரியும் இன்னொருவர் ஜஸ்டின் ஸ்கின்னர் (JUSTIN SKINNER). இங்கிலாந்து நாட்டின் கால்பந்து வீரரான இவர் கடந்த 1986ஆம் ஆண்டு முதல் பல்வேறு அணிகளுக்காக விளையாடியுள்ளார். ஓய்வுக்கு பின் ஒருசில அணியின் மேனேஜராகவும் பணியாற்றியுள்ளார். இவர்கள் இருவரும் 'பிகில்' படத்தில் கால்பந்து குறித்த காட்சிகளுக்காக பணியாற்றியுள்ளனர். இவர்கள் இருவரின் பக்கபலத்தால் இந்த படம் உலகத்தரம் வாய்ந்த ஒரு கால்பந்து விளையாட்டு திரைப்படமாக உருவாகி வருகிறது உறுதியாகியுள்ளது.

More News

'வாரிசு அரசியலை தடுத்தே ஆக வேண்டும்: 'தர்மபிரபு' டிரைலர் விமர்சனம்

யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்த 'தர்மபிரபு' திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

'மைக்கேல்' பட நாயகி மாற்றம்: வாணி போஜனுக்கு பதில் டிவி சீரியல் நடிகை

இன்றைய சூழ்நிலையில் 'மைக்கேல்' என்றால் அனைவருக்கும் 'பிகில் பட விஜய் கேரக்டர் தான் ஞாபகம் வரும்.

பிகில் மூன்றாவது லுக்: தீப்பொறிகளுக்கு நடுவில் மைக்கேல்

விஜய் நடித்து வரும் 'பிகில்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் செகண்ட்லுக் நேற்று வெளியாகி இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்த நிலையில் சற்றுமுன் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 15 போட்டியாளர்கள் இவர்கள் தானா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி அதில் கலந்து கொண்ட ஓவியா, ஹரிஷ் கல்யாண், ஆரவ், உள்பட சில போட்டியாளர்கள்

ஓவியாவின் அடுத்த படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிக்பாஸ் 3' நிகழ்ச்சி நாளை முதல் தொடங்கவிருக்கும் நிலையில் பிக்பாஸ் என்றால் அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது ஓவியாகத்தான் இருக்கும்