close
Choose your channels

விஜய்யின் 'பிகில்' போஸ்டரில் ஹாலிவுட் கனெக்சன்: யாராவது இதை கவனித்தீர்களா?

Saturday, June 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய்யின் 'பிகில்' பட போஸ்டர்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து விஜய் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் மூழ்கடித்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் ஹாலிவுட் கலைஞர் ஒருவரும் சர்வதேச கால்பந்து விளையாட்டு வீரர் ஒருவரும் பணிபுரிந்துள்ளனர். இந்த இருவரின் பெயர்களும் நேற்றும், இன்றும் வெளியாகியுள்ள போஸ்டரில் உள்ளது. இதனை யாராவது கவனித்தீர்களா?

'பிகில்' படத்தில் பணிபுரியும் ஹாலிவுட் கலைஞர் எமி மெக்டேனியல் (AMEE McDANIEL). இவர் ஹாலிவுட்டில் வெளிவந்த ஸ்போர்ட்ஸ் படங்களான 'பீலே', 'மில்லியன் டாலர் ஆர்ம், 'ஜாம் அண்ட் ஜில்', 'சூப்பர்மேன் ரிட்டர்ன்ஸ்' போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார்.

அதேபோல் இந்த படத்தில் பணிபுரியும் இன்னொருவர் ஜஸ்டின் ஸ்கின்னர் (JUSTIN SKINNER). இங்கிலாந்து நாட்டின் கால்பந்து வீரரான இவர் கடந்த 1986ஆம் ஆண்டு முதல் பல்வேறு அணிகளுக்காக விளையாடியுள்ளார். ஓய்வுக்கு பின் ஒருசில அணியின் மேனேஜராகவும் பணியாற்றியுள்ளார். இவர்கள் இருவரும் 'பிகில்' படத்தில் கால்பந்து குறித்த காட்சிகளுக்காக பணியாற்றியுள்ளனர். இவர்கள் இருவரின் பக்கபலத்தால் இந்த படம் உலகத்தரம் வாய்ந்த ஒரு கால்பந்து விளையாட்டு திரைப்படமாக உருவாகி வருகிறது உறுதியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.