முட்டாள்கள் இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்கா, லண்டனிலும் உள்ளனர்: எஸ்வி சேகர்

மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தாலும் சர்வதேச பிரபலங்கள் குரல் கொடுத்த பின்னரே இந்த போராட்டம் உலகின் கவனத்தை பெற்றுள்ளது.

குறிப்பாக அமெரிக்க பாப் பாடகி ரிஹானா, சமூக செயற்பாட்டாளர் கிரேட்டா மற்றும் நடிகை மியா கலீஃபா ஆகியோர் குரல் கொடுத்த பின்னரே இந்த பிரச்சனை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சர்வதேச பிரபலங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களும் ட்விட்டரில் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து விடுகின்றனர். அதேபோல் சர்வதேச பிரபலங்களுக்கு ஆதரவாகவும் நம்மூர் பிரபலங்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்து வரும் நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர் அவர்கள் சர்வதேச பிரபலங்கள் இந்திய விவசாயிகளின் போராட்டம் குறித்து கூறிய கருத்துக்கு கூறியதாவது:

பிரபலத்தை வர்த்தகம் செய்யும் முட்டாள்கள் மற்றும் அறிவற்றவர்கள் நம் இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்கா லண்டன் போன்ற நாடுகளிலும் உள்ளனர். இந்திய ஜனநாயக அமைப்பைப் புரிந்து கொள்ளாமல் விமர்சிப்பதை நிறுத்துவதே அவர்களுக்கு நல்லது.

வழக்கம்போல் எஸ்வி சேகரின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

More News

ராகவா லாரன்ஸ் 'ருத்ரன்' படத்தில் இணைந்த பிரபல ஹீரோ!

ராகவா லாரன்ஸ் நடிப்பில் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ருத்ரன்'. இந்த படத்தின் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது

அடுத்த படத்திற்கான டப்பிங் பணியை முடித்த சிம்பு: எப்போது ரிலீஸ்?

நடிகர் சிம்பு நடித்த திரைப்படங்கள் கடந்த சில ஆண்டுகளாக குறைவாகவே ரிலீஸ் ஆனாலும் தற்போது அவர் ஒரே நேரத்தில் பல படங்களில் கமிட்டாகி நடித்து கொண்டிருக்கிறார் என்பதும்

பூட்டிய வீட்டிற்குள் ஆணும் பெண்ணும் இருப்பது தவறா? சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம்!

பூட்டிய வீட்டிற்குள் ஒரு ஆணும் பெண்ணும் தனியாக இருந்தால் அதைத் தவறாக எடுத்துக் கொள்ள முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

உரிமைக்களுக்காக போராடுவதும் ஜனநாயகம்தான்: பிரபல தமிழ் ஹீரோ

டெல்லியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் வடமாநில விவசாயிகளுக்கு ஆதரவாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன 

வெளிநாட்டு பிரபலங்களுக்கு ஆதரவாக கருத்து கூறிய ரஜினி பட நாயகி!

மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த போராட்டம் குறித்து வெளிநாட்டு பிரபலங்கள் குரல் கொடுத்ததால் பெரும் பரபரப்பு .