முழுக்க முழுக்க போதைப்பொருள் பணத்தில் தயாரித்த தமிழ் படம்.. ஜாபர் சாதிக் வாக்குமூலத்தில் திடுக் தகவல்..!

  • IndiaGlitz, [Saturday,March 09 2024]

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் இடம் விசாரணை நடத்தியதில் போதைப்பொருள் கடத்தியதன் மூலம் முழுக்க முழுக்க ஒரு தமிழ் படம் தயாரித்துள்ளது விசாரணை மூலம் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் டெல்லியில் போதைப்பொருள் கடத்திய மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த கடத்தலில் மூளையாக இருந்தது ஜாபர் சாதிக் தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் தேடி வந்த நிலையில் இன்று காலை அவர் ஜெய்ப்பூரில் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்து வரும் நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விசாரணையின் போது ஜாபர் சாதிக் அளித்த வாக்குமூலத்தில் ’இதுவரை மொத்தம் 3000 முதல் 3500 கிலோ போதைப்பொருள் கடத்தல் செய்திருப்பதாகவும், அதன் மூலம் கிடைத்த பணத்தை பெரும்பாலும் திரைப்படங்களில் முதலீடு செய்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

குறிப்பாக தமிழில் தயாரான ’மங்கை’ என்ற திரைப்படம் முழுக்க முழுக்க போதைப்பொருள் கடத்தல் மூலம் வந்த பணத்தில் தயாரிக்கப்பட்டது என்றும் திரைப்படம் மட்டுமின்றி ரியல் எஸ்டேட் தொழிலிலும் இந்த பணத்தை முதலீடு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த பணத்தை பயன்படுத்தி சென்னையில் ஒரு ஹோட்டல் கட்டி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளதை அடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்க போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் திரையுலகில் இருக்கும் சிலருக்கும் இவருக்கும் இருக்கும் தொடர்பு குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும், மும்பையில் உள்ள சில திரை உலக பிரபலங்களும் இவரது தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுவதால் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் விசாரணை வளையத்தில் பல திரையரங்க பிரபலங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

 

More News

காதல் திருமணம் செய்த கணவருடன் என்னை சேர்த்து வையுங்கள்: சின்னத்திரை நடிகை வழக்கு

காதல் திருமணம் செய்த கணவருடன் என்னை சேர்த்து வையுங்கள் என கோரிக்கை விடுத்து சின்னத்திரை நடிகை தீபா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மக்களவை தேர்தலில் போட்டியில்லை.. ஆனாலும் எம்பியாகிறார் கமல்ஹாசன்.. எப்படி?

வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடும் என்றும் அக்கட்சிக்கு திமுக கூட்டணியில் இருந்து ஒரு தொகுதி ஒதுக்கப்படும்

நடிகர் சங்க கட்டிடம்.. அமைச்சர் உதயநிதியை அடுத்து கமல்ஹாசன் செய்த உதவி..!

 நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கான முயற்சி கடந்த சில ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வரும் நிலையில்  நிதி நெருக்கடி காரணமாக இந்த கட்டிடத்தின் பணிகள் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது.

பாலைவன புயல்.. உயிரை காக்க போராடும் ஹீரோ..  அசர வைக்கும் 'ஆடு ஜீவிதம்' டிரைலர்.!

பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் நடித்த  'ஆடு ஜீவிதம்' என்ற திரைப்படம் வரும் 28ஆம் தேதி திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன்

பிக்பாஸ் பிரதீப் நடித்த 2 படங்களின் இயக்குனரின் அடுத்த படம்.. ஹீரோ யார் தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அதன் பிறகு பாதியில் வெளியேற்றப்பட்ட பிரதீப் அந்தோணியை வைத்து இரண்டு படங்களை இயக்கிய இயக்குனர் தற்போது மூன்றாவது படத்திற்கு