தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' படத்தில் அரேபியன் பாடலா?

  • IndiaGlitz, [Friday,August 27 2021]

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது தெரிந்ததே.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவிலும், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் நடைபெற்று முடிந்த நிலையில் விரைவில் அடுத்த கட்டப்படப்பிடிப்பு டெல்லியிலும் அதனை அடுத்து ரஷ்யாவிலும் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் இந்த படத்தில் விஜய்யின் ஓபனிங் பாடல் தமிழ் மற்றும் அரபு மொழி கலந்த பாடல் என்றும், இந்த பாடலை கம்போஸ் செய்தது மட்டுமன்றி அனிருத்தே பாடி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த பாடல் காட்சியின் படப்பிடிப்பு சமீபத்தில் படமாக்கப்பட்ட போதுதான் படக்குழுவினர்களிடம் இருந்து இந்த தகவல் கசிந்து இருப்பதாகவும் இந்த பாடலில் பூஜா ஹெக்டேவும் நடனமாடி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த பாடல் அட்டகாசமாக வந்திருப்பதாகவும் இந்த பாடல் திரையில் தோன்றும் போதும் ரசிகர்களை எழுந்து ஆட வைக்கும் அளவிற்கு இந்த பாடலில் இருக்கும் என்றும் கூறப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

ஹரி-அருண்விஜய் படத்திலிருந்து விலகிய பிரகாஷ்ராஜ்....! அந்த ரோலுக்கு பிரபல இயக்குனர்....?

அருண் விஜய்-க்கு அண்ணனாக நடிக்க, நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்களை ஒப்பந்தம் செய்திருந்தனர்

சினிமாவில் அறிமுகமாகும் விஷால் பட நாயகியின் மகள்!

நடிகர் விஷால் நடித்த படத்தில் நாயகியாக நடித்த நடிகையின் மகள் சினிமாவில் அறிமுகமாக உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 

முடிவுக்கு வந்தது ஷங்கர் பட பிரச்சனை: விரைவில் படப்பிடிப்பு

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் படம் ஒன்று நீண்டகாலமாக பிரச்சனையில் இருந்த நிலையில் தற்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் முயற்சியால் அந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதால்

ரூ.3 கோடி கடனுக்கு ரூ.4 கோடி வட்டி: விமல் புகாரால் தயாரிப்பாளர் மீது வழக்கு!

ரூபாய் மூன்று கோடி வாங்கிய கடனுக்காக நான்கு கோடி ரூபாய் வட்டி கட்டியதாக தன்னிடம் கூறி தன்னை ஏமாற்றியதாக தயாரிப்பாளர் மற்றும் இரண்டு பைனான்சியர்கள் மீது நடிகர் விமல் புகார்

6 மாதத்தில் 37 கிலோ உடல் எடை குறைப்பு.....! சீரியலில் சாதிக்கும் நடிகை....!

முதன் முதலாக சன் தொலைக்காட்சியில் திருமுருகன் இயக்கத்தில் ஒளிபரப்பான "தேன் நிலவு" சீரியல் மூலம், சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் கிருத்திகா.