close
Choose your channels

6 மாதத்தில் 37 கிலோ உடல் எடை குறைப்பு.....! சீரியலில் சாதிக்கும் நடிகை....!

Friday, August 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முதன் முதலாக சன் தொலைக்காட்சியில் திருமுருகன் இயக்கத்தில் ஒளிபரப்பான "தேன் நிலவு" சீரியல் மூலம், சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் கிருத்திகா. ஜீ தமிழ் சேனலில் கடந்த 2017-ல் வெளியான "பூவே பூச்சுடவா" என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இதற்கு முன் சன் டிவியில் பைரவி என்ற தொடரிலும், ராஜ் டிவியில் ஹலோ ஷியாமளா, பொன்னுஞ்சல் போன்ற தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். Chennai -28 போன்ற ஒரு சில தமிழ் படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தன்னுடைய பழைய உடலமைப்பு மற்றும் புதிய உருவ அமைப்பிற்கான ட்ரான்ஸ்பர்மேஷன் வீடியோ ஒன்றை இன்ஸ்டா-வில் பகிர்ந்திருந்தார். கிருத்திகாவின் பழைய மற்றும் புதிய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவரா என்று வாயடைத்து போயுள்ளனர்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது,
"அண்மையில் பேட்டி ஒன்றில் தன்னுடைய உடல் அமைப்பு மாற்றம் குறித்த ரகசியத்தை கூறியுள்ளார் கிருத்திகா. பிரசவத்திற்கு பின் எனக்கு உடல் எடை அதிகரித்தது. திடீரென 70 கிலோவிலிருந்து நான் 99 கிலோ வரை உடல் எடை அதிகரித்தேன். இதனால் எனக்கு பிடித்த ஆடைகளை கூட என்னால் போட முடியாத சூழல் ஏற்பட்டது. என் மீது எனக்கே கோபம் வந்த நிலையில், டயட் நிபுணரின் அறிவுரையின் பேரில், லிக்விட் டயட்டை பின்பற்றி வந்தேன். இதனால் 6 மாதத்திற்குள் 37 கிலோ வரை எனக்கு உடல் எடை குறைந்தது. இதனுடன் வாக்கிங், தோப்புக்கரணம் போன்ற சில விஷயங்களையும் தொடர்ந்து பின்பற்றி வந்தேன். முதல் 1 மாதம் எந்த ரிசல்ட்டும் தெரியாத நிலையில், டயட் நிபுணர் பொறுமையாக பின்பற்றி வர சொன்னார். இந்த முக்கிய குறிப்புகளை பின்பற்றியதால் மட்டுமே எனக்கு உடல் எடை குறைந்துள்ளது" என்று கூறியுள்ளார்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.