எஸ்பிபி இறுதிச்சடங்கு குறித்த தகவல்: பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதிக்கப்படுமா?

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்கள் இன்று பிற்பகல் 1.04 மணிக்கு காலமான நிலையில் இன்று மாலை 4 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகர் வீட்டுக்கு எஸ்.பி.பி உடல் இறுதி அஞ்சலிக்காக எடுத்து செல்லப்படுகிறது. அதன்பின்னர் எஸ்.பி.பி இறுதிச்சடங்கு அவரது தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் நடைபெறவிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் கொரோனா நெகட்டிவ் என மருத்துவமனை சான்றிதழ் கொடுத்துள்ளதால் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம் என்றும், சென்னை காம்தாநகர் இல்லத்தில் மாலை 4 மணிக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக எஸ்.பி.பி. உடல் வைக்கப்படும் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.

எஸ்பிபிக்கு இறுதியஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் அவரது உடல் வைக்கப்படவிருக்கும் இடத்தில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

More News

எஸ்பிபி மறைவு: அரசியல் பிரபலங்கள் இரங்கல்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்கள் மறைவிற்கு அரசியல் பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும்: கமல்ஹாசன்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் சற்று முன் காலமான நிலையில் அவருக்கு ஒட்டுமொத்த இந்திய திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழத்திற்கு புதிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்… முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை!!!

பாரம்பரிய சித்த மருத்துவத்திற்கு தமிழகத்தில் புதிய ஆராய்ச்சி நிறுவனத்தை ஏற்படுத்த வேண்டும்

எஸ்பிபி மரணம் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 1.04 மணிக்கு காலமானார்.

பாடகர் எஸ்பிபி காலமானார்: திரையுலகினர் இரங்கல்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் உடல்நிலை நேற்றிரவு முதல் கவலைக்கிடமாக இருந்த நிலையில் சற்று முன் அவர் காலமானதாக செய்திகள் வெளியாகியுள்ளது