லிங்குசாமியின் 'தி வாரியர்' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்!

பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவான ’தி வாரியர்’ என்ற திரைப்படம் வரும் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ள இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிந்ததே. குறிப்பாக சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலருக்கு பின்னர் எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ‘தி வாரியர்’ படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ‘தி வாரியர் திரைப்படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் ’யூஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படம் 137 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 17 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்டதாக உள்ளது .

ராம் பொத்தினேனி ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் ஆதி வில்லனாக நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் அக்ஷரா கவுடா, நதியா, பாரதிராஜா, ரெடின் கிங்ஸ்லி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீபிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விக்ரமின் மிரட்டும் நடிப்பு: 'பொன்னியின் செல்வன்' மேக்கிங் வீடியோ வைரல்!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

ஹனிமூனில் பிறந்த நாள் கொண்டாட்டம்: மனைவிக்கு முத்தத்தில் நன்றி சொன்ன நடிகர்!

தற்போது பெரிய திரை பிரபலங்களுக்கு இணையாக சின்ன திரையுலகினர்களும் சமூக வலைதளங்களில் பிரபலம் ஆகி வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சின்னத்திரை

பிக்பாஸ் சீசன் 6  நிகழ்ச்சியில் சூப்பர் சிங்கர் பிரபலம்?

பிக் பாஸ் தமிழ் ஐந்து சீசன்கள் முடிவடைந்து விரைவில் 6வது சீசன் தொடங்க இருக்கும் நிலையில் 6 வது சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல் அவ்வப்போது கசிந்து வருகிறது. 

பொன்னியின் செல்வனுக்காக பணிபுரிந்த கமல்ஹாசன்: வைரல் புகைப்படம்

'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் கமல்ஹாசன் பணிபுரிந்துள்ளார் என்ற செய்தி ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது அது குறித்த புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

சூர்யாவின் 2டி நிறுவனத்தின் அடுத்த படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா தனது 2டி நிறுவனத்தின் மூலம் பல திரைப்படங்களை தயாரித்து வருகிறார் என்பதும் ஒரு சில திரைப்படங்களை தமிழக அளவில் ரிலீஸ்