close
Choose your channels

லிங்குசாமியின் 'தி வாரியர்' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்!

Wednesday, July 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவான ’தி வாரியர்’ என்ற திரைப்படம் வரும் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ள இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிந்ததே. குறிப்பாக சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலருக்கு பின்னர் எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ‘தி வாரியர்’ படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ‘தி வாரியர் திரைப்படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் ’யூஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படம் 137 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 17 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்டதாக உள்ளது .

ராம் பொத்தினேனி ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் ஆதி வில்லனாக நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் அக்ஷரா கவுடா, நதியா, பாரதிராஜா, ரெடின் கிங்ஸ்லி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீபிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.