ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு: புதிய தேதி அறிவிப்பு

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டிகள் இந்த ஆண்டு மார்ச் 29ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. அதற்கான பயிற்சிகளில் ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள் ஈடுபட்ட வந்தன என்பதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களான தல தோனி உள்பட பலர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி பெற்றனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதை தள்ளிவைக்க வேண்டும் அல்லது பார்வையாளர் இல்லாமல் ஐபிஎல் போட்டியை நடத்த வேண்டும் என பிசிசிஐக்கு மத்திய மாநில அரசுகள் கோரிக்கை வைத்தன.

ஆனால் பார்வையாளர் இல்லாமல் ஐபிஎல் போட்டியை நடத்தும் பேச்சுக்கே இடமில்லை என்று பிசிசிஐ மறுத்து விட்டதாக செய்திகள் வெளிவந்தன. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பார்வையாளர்களால் பரவாமல் இருக்கும் வகையில் தற்போது ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 29ம் தேதி தொடங்க இருந்த ஐபிஎல் போட்டி தற்போது ஏப்ரல் 15ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து ஐபிஎல் போட்டிகளின் புதிய அட்டவணை விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்தால் மீண்டும் ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

More News

பெங்களூருவில் GOOGLE ஊழியருக்கு கொரோனா தொற்று..?! பரவாமல் தடுக்குமா அரசு..?!

எந்த ஒரு அறிகுறியும் தெரிவதற்கு முன்னர் வரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஊழியர் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்ததாக கூகுளின் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

கொரோனா பயமா??? சந்தேகங்களுக்கு உடனே தொடர்பு கொள்ளுங்கள்... 

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் 75 ஆக அதிகரித்து இருக்கிறது.

கொரோனா வைரசுக்கு ஜாதகம் கணித்த ஜோதிடர்

இந்தியா உள்பட உலகில் உள்ள 125 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி லட்சக்கணக்கானவர்களை ஆட்டிப்படைத்து வருகின்றது. இந்த வைரஸினால் ஐயாயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகிவிட்டபோதிலும்

ரஞ்சிதாவுக்கு பின் மீரா? இணையத்தில் வைரலாகும் வீடியோ

நடிகை ரஞ்சிதா, நித்தியானந்தாவின் ஆன்மீக கொள்கைகளால் கவரப்பட்டு அவருடைய பக்தையாகவே மாறிய நிலையில் தற்போது ரஞ்சிதாவை அடுத்து நித்தியானந்தாவை மிகவும் புகழ்ச்சியுடன் பேசி ஒரு வீடியோவை

கவனமாக இருங்கள்... நாட்டில் 70% பேருக்கு கொரோனா ஏற்பட வாய்ப்பு..! ஏஞ்சலா மெர்கல்.

அந்நாட்டு அரசானது எல்லா கலை நிகழ்ச்சிகள், திரையரங்குகள்,பள்ளிகள் கல்லூரிகள் போன்றவற்றை கால வரையறையின்றி மூடியுள்ளது