100 வருட தமிழ் சினிமாவில் 'வலிமை' மட்டுமே செய்த சாதனை: திருப்பூர் சுப்பிரமணியம்

100 வருட தமிழ் சினிமாவில் ‘வலிமை’ மட்டுமே இந்த சாதனையை செய்துள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அஜீத் நடித்த ‘வலிமை’ திரைப்படம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் 900க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானதாக கூறப்பட்டது.

ரஜினி விஜய் படங்கள் கூட 700 முதல் 800 திரையரங்குகளில் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில் ‘வலிமை’ திரைபடம் கிட்டத்தட்ட 1000 திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது கோலிவுட் திரையுலகினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது .

இந்த நிலையில் இது குறித்து தமிழக திரையரங்கு உரிமையாளர் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் கூறியபோது ’தமிழ் சினிமா வரலாற்றில்100 வருடத்தில் ‘வலிமை’ மட்டும்தான் 900க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகி எல்லா பக்கமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'விக்ரம்' படப்பிடிப்பு நிறைவு விழாவில் சகலகலா வல்லவன் கொண்டாட்டம்!

கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்லிம் பியூட்டியாக மாறிவிட்ட நடிகை பூனம் பாஜ்வா… வைரலாகும் நீச்சல்குளம் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் ஒருசில திரைப்படங்களில் மட்டுமே நடித்து ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்றவர்தான் நடிகை பூனம் பாஜ்வா.

அரபிக்குத்து பாடலுக்கு பீச்சில் ஆட்டம் போட்ட நடிகை… வைரலாகும் வீடியோ!

யூடியூப் ஷாட்ஸ், இன்ஸ்டாகிராம் என எந்தப் பக்கத்தை திருப்பினாலும்

தனக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தையே தடுத்து நிறுத்திய ரஷ்யா? நடந்தது என்ன?

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா எடுத்திருக்கும் இராணுவ நடவடிக்கைக்கு

'வலிமை' இரண்டாவது நாள் வசூல்: ரஜினி, விஜய்யை முந்திவிட்டாரா அஜித்?

அஜித்தின் அடுத்த 'வலிமை' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் நேற்று வெளியான நிலையில் தற்போது இரண்டாவது நாள் வசூல் வெளியாகியுள்ளது. முதல் இரண்டு நாள் வசூல் ரஜினி விஜய் படங்களின்