முக ஸ்டாலினை சந்தித்த திரையரங்கு உரிமையாளர்கள்: தியேட்டர்களுக்கு விடிவு காலம் வருமா?

  • IndiaGlitz, [Wednesday,May 05 2021]

திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் நாளை மறுநாள் 9 மணிக்கு தமிழக முதல்வராக பதவி ஏற்க உள்ளார். அவருக்கு ஏற்கனவே அட்வான்ஸ் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக ஒட்டுமொத்த திரையுலகமும் முதல்வராக பதவி ஏற்க இருக்கும் ஸ்டாலினுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

அந்த வகையில் சற்று முன்னர் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளான பன்னீர்செல்வம், ஐட்ரிம்ஸ் மூர்த்தி, டாக்டர் ஹரி கோவிந்த், மதிவாணன் உள்ளிட்டோர் ஸ்டாலினை சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். இதில் ஐட்ரீம்ஸ் மூர்த்தி அவர்கள் ராயபுரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்களை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடு காரணமாக திரையரங்குகள் தற்போது மூடப்பட்டு இருக்கும் நிலையில் தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றதும் நிபந்தனைகளுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்குவாரா? திரையரங்குகளுக்கு விடிவுகாலம் வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

முக ஸ்டாலினுக்கு விஜய்சேதுபதி வைத்த 14 கோரிக்கைகள்: நிறைவேற்றப்படுமா?

தமிழக முதல்வராக திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் வரும் 7ஆம் தேதி பதவியேற்க உள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

'ராட்சசன் 2' எப்போது? விஷ்ணு விஷால் தகவல்

விஷ்ணு விஷால் நடிப்பில் ராம்குமார் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'ராட்சசன். ரூ 8 கோடி தயாரிப்பில் உருவான இந்த திரைப்படம் 32 கோடி ரூபாய் வசூலித்து

அன்னையர் தினத்தை கொண்டாட அசத்தலான வாய்ப்பு… மாசில்லா அன்பை போற்றுவோம!

உயிரினத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளிலும் உயர்வாகப் பேசப்படும் ஒரு உறவு என்றால் அது அன்னைதான்.

அதிமுகவின் வெற்றியை சீமான் காலி செய்தாரா? விளக்கும் வீடியோ!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தமிழகம் முழுவதும் கணிசமான வாக்குகளைப் பெற்று தமிழகத்தில் 3 ஆவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

திமுக=ரவுடிசம்? தோலுரிக்கும் ஓய்வுப்பெற்ற அதிகாரியின் பிரத்யேக நேர்காணல் வீடியோ!

தமிழக அரசியலில் ஒரு வலுவான மற்றும் மறுக்க முடியாத கட்சியாக திமுக இருந்து வருகிறது