தனுஷ்-தேனாண்டாள் பிலிம்ஸ் படம் குறித்த முக்கிய தகவல்

  • IndiaGlitz, [Saturday,November 18 2017]

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தை அடுத்து ஸ்ரீதேனாண்டாள் நிறுவனம், தனுஷ் நடிக்கும் படத்தை தயாரிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படம் குறித்த முக்கிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனுஷ் தனது டுவிட்டரில் தனது அடுத்த படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாக அறிவித்தார். இந்த படத்தை தான் தற்போது ஸ்ரீதேனாண்டாள் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ள இந்த ஆக்சன் த்ரில் படத்தில் ஒரு பிரபல நடிகர் வில்லனாக நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது.

More News

நயன்தாராவும் அவருடைய நயமான கேரக்டர்களும்

கோலிவுட் திரையுலகில் ஒரு நடிகர் பல வருடங்கள் ஹீரோவாக நடிக்கலாம், ஆனால் ஒரு நடிகை அதிகபட்சம் ஐந்து வருடங்கள் தாக்குப்பிடிப்பதே கடினம்.

'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் முதல் நாள் தீர்க்கமான வசூல்

கார்த்தி நடிப்பில் 'சதுரங்க வேட்டை' புகழ் H.வினோத் இயக்கிய 'தீரன் அதிகாரம் ஒன்று' படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்று திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஒரே வாரத்தில் ஒன்பது கோடி ரூபாயை நெருங்கிய 'அறம்' வசூல்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் கோபி நயினார் இயக்கிய 'அறம்' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி ஊடகங்கள், விமர்சகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் பாராட்டை பெற்று

புரட்சி வரிகளுடன் பரபரப்பை ஏற்படுத்திய 'மதுரவீரன்' சிங்கிள் பாடல்

சண்முகபாண்டியன் நடித்து வரும் 'மதுரவீரன்' படத்தின் சிங்கிள் பாடல் இன்று காலை வெளிவந்துள்ளது. சமூக அவலங்களை தோலுரிக்கும் வகையில் யுகபாரதி எழுதிய இந்த பாடலுக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். 

எனக்கு பிடித்த பெண்ணிற்கு பிறந்தநாள்: விக்னேஷ் சிவன்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு இன்று ஒட்டுமொத்த கோலிவுட் திரையுலகே பிறந்த நாள் வாழ்த்து கூறி வரும் நிலையில் அவரது அன்புக்குரியவரான விக்னேஷ் சிவன் வாழ்த்துக்களை கூறாமல் இருப்பாரா?