இதுவரை 'தெறி'யின் சென்னை வசூல் நிலவரம்

  • IndiaGlitz, [Monday,April 25 2016]

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய 'தெறி' திரைப்படம் தமிழகம் உள்பட உலகம் முழுவதும் சாதனை வசூலை பெற்று வருகிறது என்று அவ்வப்போது வெளிவந்த செய்திகளை பார்த்தோம். இந்நிலையில் தலைநகர் சென்னையில் 'தெறி' திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.
'தெறி' திரைப்படம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் நிறைவடையவுள்ளது. இந்நிலையில் வார இறுதி நாட்களான ஏப்ரல் 22 முதல் 24 வரையிலான மூன்று நாட்களில் தெறி' திரைப்படம் சென்னையில் 20 திரையரங்குகளில் 486 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.1,85,32,820 வசூல் செய்துள்ளது. அனைத்து திரையரங்குகளில் 90% கூட்டம் நிரம்பியது என்பது குறிப்பிடத்தகக்து.
மேலும் 'தெறி' ரிலீஸ் ஆன ஏப்ரல் 14 முதல் நேற்று வரையிலான காலகட்டத்தில் சென்னையில் மட்டும் ரூ.7,89,54,020 வசூல் செய்துள்ளது. விரைவில் இந்த படம் சென்னையில் மட்டும் ரூ.10 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனை இளையதளபதியின் திரையுலக வசூல் வரலாற்றில் ஒரு முக்கிய அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சமுத்திரக்கனியின் 'அப்பா' குறித்து சூர்யா என்ன கூறப்போகிறார்?

சூர்யாவின் அப்பா சிவகுமாரின் ஓவியம் வரைதல் குறித்து நேற்று சூர்யா பெருமையாக கூறியதை பார்த்தோம்...

தனுஷின் அடுத்த படத்தை இயக்குபவர் குறித்த ஒரு ஆச்சரியமான தகவல்

பிரபுசாலமன் இயக்கிய 'தொடரி' மற்றும் துரைசெந்தில்குமார் இயக்கிய 'கொடி' ஆகிய படங்களில் நடித்து முடித்துவிட்ட தனுஷ் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் 'எனை நோக்கி பாயும் தோட்டா'...

ஜெயலலிதா அதிமுகவில் இணைந்தார் நமீதா

பிரபல நடிகை நமீதா, அதிமுகவில் இணைய விருப்பம் தெரிவித்து முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதினார்...

விக்ரமின் 'இருமுகன்' அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே? எப்போது?

'அரிமாநம்பி' ஆனந்த்சங்கர் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து வரும் 'இருமுகன்' படத்தின் சென்னை, மலேசியா படப்பிடிப்புகள் வெற்றிகரமாக...

சூர்யாவின் '24' சென்சார் தேதி குறித்த தகவல்

முதன்முதலாக மூன்று வித்தியாசமான வேடங்களில் சூர்யா நடித்துள்ள '24' திரைப்படம் வரும் மே மாதம் 6ஆம் தேதி ரிலீஸ் ஆவது 100% உறுதி செய்யப்பட்டுள்ளது...