தந்தூரி சிக்கன் சாப்பிட்ட 12ஆம் வகுப்பு மாணவர் பரிதாப பலி!

  • IndiaGlitz, [Thursday,June 02 2022]

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தந்தூரி சிக்கன் சாப்பிட்ட 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் பரிதாபமாக பலியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேரளாவில் பள்ளி மாணவி ஒருவர் ஷவர்மா சாப்பிட்டதால் உயிரிழந்த நிலையில் ஷவர்மா கடைகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணி காந்திநகர் சாலையில் உள்ள ஓட்டல் ஒன்றில் திருமுருகன் என்ற 12ஆம் வகுப்பு மாணவர் தனது நண்பர்களுடன் சென்று தந்தூரி சிக்கன் மற்றும் பிரைட்ரைஸ் சாப்பிட்டுள்ளார்.

வீட்டுக்கு திரும்பிய திருமுருகனுக்கு கடும் வயிற்றுவலி ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து அவரது பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். அதன்பின் மறுநாள் திருமுருகனுக்கு திடீரென வயிற்று போக்கு அதிகமானதை அடுத்து அவர் வேலூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து திருமுருகனின் தந்தை கணேஷ் என்பவர் தனது மகனின் இறப்புக்கு தந்தூரி சிக்கன் தான் காரணம் என்றும் தந்தூரி சிக்கன் விற்பனை செய்த கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

More News

பிரபல நடிகர் தொடர்ந்த அவதூறு வழக்கு: அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் தொடர்ந்த அவதூறு வழக்கில் அதிரடியாக தீர்ப்பு வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

ஷாருக்கான் - அட்லி படத்தின் டைட்டில் இதுதான்: வைரலாகும் தகவல்

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு

கலர்ஃபுல் பிகினி உடையில் தனுஷ் பட நடிகை: வைரல் புகைப்படம்

தனுஷ் படத்தில் நடித்த நடிகை தனது சமூக வலைத்தளத்தில் கலர்ஃபுல் பிகினி உடையுடன் கூடிய புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படத்திற்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது

செம கிளாமர் வொர்க்-அவுட் போட்டோஷூட்: வைரலாகும் ஷெரீன் புகைப்படங்கள்!

தனுஷ் நடித்த 'துள்ளுவதோ இளமை' என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷெரின். அதன் பின் ஒரு சில திரைப்படங்களில் நாயகியாக நடித்தவர், பிக்பாஸ் நிகழ்ச்சி பின்னர் பிரபலமானார்.

கோட்-சூட், பாப்-கட்டிங்: ஆளே அடையாளம் தெரியாத வகையில் மாறிய வனிதா: வைரல் புகைப்படங்கள்!

 நடிகை வனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோட்-சூட், பாப்-கட்டிங் என ஆளே அடையாளம் தெரியாத வகையில் வித்தியாசமாக உள்ளார். இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.