டைட்டில் வெல்வார் என எதிர்பார்த்தோமே... பணப்பெட்டியுடன் கிளம்பியது இந்த போட்டியாளரா?

  • IndiaGlitz, [Thursday,January 19 2023]

பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக இந்த சீசனில் பணமூட்டை மற்றும் பணப்பெட்டி ஆகிய இரண்டும் அறிமுகம் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் டைட்டில் வெல்வார் என கணிக்கப்பட்ட போட்டியாளர் பணப்பெட்டியை எடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

ஒவ்வொரு சீசனிலும் கடைசி வாரத்தில் பணப்பெட்டி அறிமுகம் செய்யப்படும் என்பதும் அந்த பணப்பெட்டியில் உள்ள பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு போட்டியாளர் வெளியேறுவார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த சீசனில் வித்தியாசமாக பண மூட்டை அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் அதிலுள்ள மூன்று லட்சத்தை எடுத்துக்கொண்டு கதிரவன் வீட்டை விட்டு வெளியேறினார். இந்த நிலையில் அடுத்த நாளே பிக் பாஸ் வீட்டில் பணப்பெட்டி அறிமுகப்படுத்தப்பட்டது என்பதும் ரூ.3 லட்சத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட அந்த பணப்பெட்டியின் மதிப்பு ஒவ்வொரு நிமிடமும் உயர்ந்து கொண்டே சென்றது.

இந்த நிலையில் விக்ரமன் மற்றும் அசீம் ஆகிய இருவருமே பணப்பெட்டியை எடுக்கப் போவதில்லை என்று உறுதிபட கூறிவிட்டதால் மைனா, ஷிவின் மற்றும் அமுதவாணன் ஆகிய மூவரில் ஒருவர் பணப்பெட்டியை எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

மைனா மற்றும் அமுதவாணன் ஆகிய இருவரும் 20 லட்சத்துக்கு மேல் வந்தால் பார்க்கலாம் என காத்திருந்த நிலையில் 10 லட்சத்துக்கு மேல் வந்தாலே நான் எடுத்து விடுவேன் என்று ஷிவின் கூறியிருந்தார்.

இந்த சீசனின் மிகவும் சவாலான போட்டியாளர் ஷிவின் என்பதால் அவர் நிச்சயம் டைட்டில் வெல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் அவர் 10 லட்ச ரூபாய் வந்தவுடன் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாகவும் இன்றைய நிகழ்ச்சியில் அவர் வெளியேறியது ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 100 நாட்களுக்கு மேல் தாக்குப்பிடித்த ஷிவின் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு சென்றது அவரது ரசிகர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ள நிலையில் அவரது முடிவை ஒருசிலர் பாராட்டி வருகின்றனர்.

More News

பிக்பாஸ் சனம்ஷெட்டி கூறிய திடுக்கிடும் புகார்.. விளக்கம் அளித்த உயரதிகாரி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான நடிகை சனம் ஷெட்டி கூறிய திடுக்கிடும் புகாருக்கு விமான நிலைய அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். 

மீண்டும் இந்தியா முழுவதும் சுற்றும் 'பொன்னியின் செல்வன்' படக்குழு.. பிரமாண்டமான புரமோஷன் திட்டம்!

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூல்

'வாரிசு' படத்தின் வசூல் வடைகள்.. கேலி செய்த 'துணிவு' தயாரிப்பாளர்

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' படத்தின் வசூல் தகவல்கள் இணையதளங்களில் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இந்த தகவல்கள் போலியானவை என்பதை குறிக்கும் வகையில் 'துணிவு'

சிரஞ்சீவியின் அடுத்த படமும் அஜித் படத்தின் ரீமேக்கா? 

 அஜித் நடித்த 'வேதாளம்' படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தில் நடித்து வரும் சிரஞ்சீவி நடிக்க இருக்கும் அடுத்த படமும் அஜித்தின் இன்னொரு வெற்றி படத்தின் ரீமேக் தான் என தகவல் வெளியாகி உள்ளன. 

நீங்க ஒரு காமெடியன் இல்லை, முழு கலைஞன்.. பிக்பாஸ் இடம் பாராட்டு பெற்ற போட்டியாளர்!

நீங்கள் வேண்டுமானால் உங்களை ஒரு காமெடியானாக நினைத்து கொண்டிருக்கலாம், ஆனால் என்னைப் பொருத்தவரை நீங்கள் ஒரு முழு கலைஞன் என பிக் பாஸ் இடம் பாராட்டு பெற்ற போட்டியாளர்