close
Choose your channels

திருமணக் கோலத்தில் சென்ற இளம் பெண்ணின் பின்னால் 6 கி.மீ தூரம் நாய் துரத்திய சம்பவம்!!!

Saturday, December 12, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருமணக் கோலத்தில் சென்ற இளம் பெண்ணின் பின்னால் 6 கி.மீ தூரம் நாய் துரத்திய சம்பவம்!!!

 

சீனாவில் ஒரு இளம் பெண் தன்னுடைய திருமணத்தை முடித்துக் கொண்டு கணவன் வீட்டிற்கு செல்கிறார். அப்போது தனது செல்ல நாயையும் உடன் அழைத்துச் செல்ல முற்படுகிறார். ஆனால் இதுவரை காரில் ஏறிப் பழக்கம் இல்லாத அந்த சிறிய நாய்க்குட்டி காரில் ஏற அடம் பிடிக்கிறது. இதனால் ஒரு கட்டத்தில் பிரியத்தான் வேண்டும் என முடிவெடுத்து அந்தப் பெண் காரில் ஏறி தனது கணவனுடன் சென்று விடுகிறார். 

இதைப் பார்த்த அந்த குட்டி நாய் வளர்த்தவரை பிரிய மனமில்லாமல் நெடுஞ்சாலை என்று கூட பார்க்காமல் 6 கி.மீ தூரம் வரை காரின் பின்னாலேயே ஒடுகிறது. இந்தக் காட்சியைப் பார்த்த பலரும் கண்கலங்கி நிற்கின்றனர். ஒரு கட்டத்தில் ஓட முடியாமல் சாலையின் ஒரத்தில் நின்றுவிட்ட அந்த நாய்க்குட்டி அழுது கொண்டே மீண்டும் வீட்டிற்கு சென்று விடுகிறது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பலரது மனதையும் கரைத்து வருகிறது.

சீனாவின் ஹீனான் மாகாணத்தில் உள்ள ஒரு பகுதியில் Ms Fu எனும் இளம்பெண் கடந்த 2 வருடங்களாக Fugui எனும் நாய்க்குட்டியை செல்ல வளர்த்து வந்திருக்கிறார். இந்த Fugui தான் தனது எஜமானி வேறு வீட்டிற்கு செல்வதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் இப்படி நெடுஞ்சாலையில் மூச்சிறைக்க ஓடி இருக்கிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் நாய்க்குட்டியின் பாசத்தை நெகிழ்ச்சிப் பொங்க பாராட்டி வருகின்றனர். ஒரு சிலர் சாலையில் ஓட விட்டு வேடிக்கை பார்க்க எப்படித்தான் அந்தப் பெண்ணிற்கு மனது வந்ததோ என விமர்சித்தும் வருகின்றனர். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.