வலுவான தலைமுடி வேண்டுமா? நடிகை குஷ்பு சொன்ன டிப்ஸை try பண்ணுங்க…

  • IndiaGlitz, [Friday,July 16 2021]

தமிழ் சினிமாவில் 80-90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை குஷ்பு இன்றைக்கும் பல யூத் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் தனது அழகை தொடர்ந்து பராமரித்து வருகிறார். நடிப்பைத் தவிர அரசியல் களத்திலும் தீவிரமாகச் செயல்பட்டு வரும் இவர் தனது பிசியான வாழ்க்கைக்கு மத்தியில் ஸ்கின் கேர், ஹேர் கேரில் அதிகம் அக்கறை காட்டுகிறார்.

அந்த வகையில் தன்னுடைய இன்ஸ்டா ரசிகர்களுக்கு நடிகை குஷ்பு சொல்லிய ஹேர் கேர் டிப்ஸ் தற்போது சோஷியல் மீடியாவில் கவனம் பெற்று இருக்கிறது. நடிகைகள் பிசியான வாழ்க்கைக்கு மத்தியில் செயற்கை க்ரீம்களை பூசிக் கொள்வார்கள், ஷாம்புவை பயன்படுத்துவார்கள் என நம்பிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் நடிகை குஷ்பு தன்னுடைய ஹெல்தியான கூந்தலுக்கு வெந்தயம்தான் முக்கியக் காரணம் எனச் சொல்லி இருக்கிறார்.

அதுவும் வெந்தயத்தை ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்து அந்த வெந்தயத்தோடு சேர்த்து செம்பருத்தி இலைகள் மற்றும் பூக்களையும் சேர்த்து கூடவே தயிர், முட்டை, ரோஸ்மேரி ஆயில் போன்றவற்றையும் சேர்த்து அரைத்து கொள்வாராம். அதை ஒரு பேக் போல தலையில் பூசிக்கொண்டு ஒரு மணி நேரம் ஊற வைப்பாராம். பின்னர் கூந்தலை எப்போதும்போல அலசினால் வலுவான ஆரோக்கியமான கூந்தலை நாமும் பெறலாம் எனத் தெரிவித்து இருக்கிறார்.

வெந்தயம் என்பது உடலுக்கு அதிகக் குளிர்ச்சியைத் தரக்கூடிய ஒன்று. அதேபோல தயிர் பொடுகை நீக்க உதவுகிறது. முட்டை தலையில் உள்ள முடியின் வேர்கால்களை வலுப்படுத்தும். செம்பருத்தி இலை மற்றும் பூக்கள் முடியின் வளர்ச்சிக்கு உதவுவதோடு அதன் நிறத்தை மேம்படுத்த உதவுகிறது. இத்தனை நல்ல அம்சம் கொண்ட ஹேர் டிப்பை உபயோகித்து நீங்களும் பயன்பெறுங்கள்.

More News

முதல் நாளே கமல்-விஜய்சேதுபதி மோதல்? 'விக்ரம்' படப்பிடிப்பு ஆரம்பம்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தயாராக இருக்கும் திரைப்படம் 'விக்ரம்' என்றும் இந்த படத்தின் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது

நாசர் மகன் நடிக்கும் திரைப்படம்: டைட்டிலை அறிவித்த கமல்ஹாசன்!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் நாசர் மகன் அபிஹாசன் ஏற்கனவே கமல்ஹாசன் தயாரித்த 'கடாரம் கொண்டான்' என்ற திரைப்படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்தார் என்பது தெரிந்ததே.

வரிக்காக அல்ல, மேல்முறையீடு செய்வது இதற்காகத்தான்: விஜய் வழக்கறிஞர்!

விஜய் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான வரி குறித்த வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வெளியான நிலையில் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி அவருக்கு தனது கண்டனத்தையும்

நம்பவே முடியாத புது தொழில்நுட்பத்துடன் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்? முன்பதிவு செய்வது எப்படி?

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை அடுத்து பலரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மீது கவனம் செலுத்தி வருகின்றனர்.

பயமும் பதட்டமும் உங்களை வாட்டி எடுக்கிறதா? வெளிவர எளிய டிப்ஸ்!

ஆப்பிள் நிறுவனத்தின் ஓனரோ அல்லது ஆப்பக்கடை வைத்திருப்பவரோ, யாராக இருந்தாலும் ஏதோ ஒரு வகையில் பயமும் பதட்டமும் இருக்கத்தான் செய்யும்.