பிகில் படத்தின் நிஜமான வெற்றி! வைரலாகும் வீடியோ!

  • IndiaGlitz, [Saturday,November 02 2019]

தளபதி விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படம் கடந்த தீபாவளி விருந்தாக திரைக்கு வந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்த படம் ஒருபக்கம் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக ஒரு தகவலும், பார்வையாளர்கள் வராததால் காட்சிகள் ரத்து என இன்னொரு தகவலும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது

இந்த நிலையில் வசூல் அளவில் எப்படியோ, மனதளவில் இந்த படம் நிஜமான வெற்றியை பெற்றுள்ளது என்பதற்கு தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்றே சான்றாக உள்ளது. பிகில் படத்தில் ஆசிட் வீசியதால் முகம் பாதிக்கப்பட்ட ரெபா மோனிகா கேரக்டர் ஒன்று இருக்கும். இந்த கேரக்டரிடம் விஜய் பேசி வீட்டுக்குள் முடங்கியிருந்த அவரை வெளியே வரவழைத்து கால்பந்து போட்டியில் கலந்து கொள்ள வைப்பார். முன்னதாக இந்த கேரக்டர்ஆசிட் வீசியவனையே நேரில் சந்தித்து ‘ஆசிட் வீசிய நீயே வெளியே நடமாடும்போது, நான் ஏன் வீட்டுக்குள் முடங்கியிருக்க வேண்டும்’ என்ற வசனம் அனைவரையும் கவர்ந்திருக்கும்

இந்த நிலையில் பிகில் படத்தை பார்த்த ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இந்த வசனத்தை பேசிய வீடியோ ஒன்றுதான் தற்போது வைரலாகி வருகிறது. இதுபோன்ற பெண்கள் வெளியே தைரியமாக வருவதுதான் இந்த படத்தின் உண்மையான வெற்றி என நெட்டிசன்கள் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

இந்த வீடியோவை பிகில் படத்தில் நடித்த நடிகை வர்ஷா பொம்மலா உள்பட பலர் தங்களுடைய சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

ஷாருக்கானின் 54வது பிறந்த நாள்: நள்ளிரவில் வீட்டில் குவிந்த ரசிகர்கள்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் அவர்களின் 54 வது பிறந்தநாள் இன்று அவரது ரசிகர்களால் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஷாருக்கானின் ஒவ்வொரு பிறந்தநாளின் போ

ரஜினிக்கு மத்திய அரசு அறிவித்த மிகப்பெரிய விருது!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் நடித்து கொண்டிருக்கின்றார்.

கண்டக்டருடன் மனைவி கள்ளக்காதல்: கேஸ் சிலிண்டரை வெடிக்க வைத்த கணவர்!

மதுரை அருகே உசிலம்பட்டி என்ற பகுதியை சேர்ந்த கருப்பையா-கீதா தம்பதியருக்கு இரண்டு மகள்கள் இருந்தனர். கருப்பையா மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார்.

ரஜினியின் கடைசி படத்தை தயாரிப்பது யார்? முன்னணி நிறுவனங்கள் போட்டி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 167 ஆவது திரைப்படமான 'தர்பார்' திரைப்படம் வரும் பொங்கலன்று வெளியாக உள்ளது. இதனை அடுத்து அவர் நடிக்கும் 168வது படத்தை சிறுத்தை சிவா இயக்க உள்ளார்.

கவிஞர் சினேகனுக்கு புதிய பதவி! கமல்ஹாசன் கொடுத்த ஆச்சரியம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழகம் மூலம் கட்டிப்பிடி வைத்தியர் என செல்லமாக அழைக்கப்பட்டு புகழ் பெற்றவர் கவிஞர் சினேகன். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கமல்ஹாசனுடன்