close
Choose your channels

ரஜினியின் 'தலைவர் 170' படத்தில் இந்த இரண்டு பிரபலங்களா?

Monday, October 31, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் ஜெயிலர் படத்தில் நடித்து கொண்டிருக்கும் நிலையில் அவருடைய அடுத்த இரண்டு திரைப்படங்களை லைகா நிறுவனம் தயாரிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு படங்களில் ஒரு படத்தின் பூஜை வரும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தலைவர் ரஜினியின் ‘தலைவர் 170’ படம் குறித்த தகவல்கள் தற்போது கசிந்துள்ளது. இந்த படத்தை சிபிசக்கரவர்த்தி இயக்க போகிறார் என்பதும் அனிருத் இசையமைக்க இருக்கிறார் என்பதும் தெரிந்ததே. தற்போது இந்த படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் அது மட்டுமின்றி நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வைகைப்புயல் வடிவேலு மீண்டும் ரஜினி படத்தில் இணைய வருவதாகவும் கூறப்படுகிறது.

மணிரத்னம் இயக்கிய ’தளபதி’ திரைப்படத்தில் ரஜினி மற்றும் அரவிந்த்சாமி கடைசியாக இணைந்து நடித்துள்ளனர். அதேபோல் பி வாசு இயக்கத்தில் உருவான ’சந்திரமுகி’ மற்றும் ‘குசேலன்’ ஆகிய படங்களை அடுத்து ரஜினியின் படத்தில் வடிவேலு நடிக்காத நிலையில் தற்போது மீண்டும் ரஜினியின் படத்தில் வடிவேலு இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment