close
Choose your channels

இந்த வாரம் ஒரே  ஒரு தமிழ்ப்படம் தான்.. ஆனாலும் ஒரு சூப்பர் ஹீரோ படம் இருக்குது: ஓடிடி ரிலீஸ் தகவல்கள்..!

Thursday, April 4, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு வாரமும் தமிழ் படங்கள் உள்பட தென்னிந்திய படங்களும் ஹிந்தி படங்களும் ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் ஒரே ஒரு தமிழ் படம் தான் ரிலீஸ் ஆகிறது என்பதும் அதுவும் இந்தியாவில் ரிலீஸ் ஆகவில்லை என்ற சோகம் இருந்தாலும் ’ஹனுமான்’ என்ற சூப்பர் ஹீரோ தெலுங்கு படம் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆவதால் சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அசோக்குமார், ராகினி திவேதி நடித்த ’இமெயில்’ என்ற திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த வாரம் இந்த படம் டென்ட்கொட்டா மற்றும் சிம்ப்ளி சவுத் ஆகிய ஓடிடியில் வெளியாகவுள்ளது. இந்த படம் இரண்டு ஓடிடி தளங்களில் வெளியானாலும் இந்தியாவில் உள்ள ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாரம் தமிழ் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும் தெலுங்கில் வெளியான சூப்பர் ஹீரோ திரைப்படமான ’ஹனுமான்’ என்ற திரைப்படம் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. தேஜா, அமிர்தா ஐயர், வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்த படம் இந்த படத்தை பிரசாந்த் வர்மா இயக்கியுள்ளார். வெறும் 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் உலகம் முழுவதும் ரூ.330 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த வாரம் 'தண்ட்ரா’ என்ற தெலுங்கு படம் ஆஹா ஓடிடியில், ‘லம்பாசிங்கி’ என்ற தெலுங்கு படம் ஹாட்ஸ்டாரில், ‘கிஸ்மத்’ என்ற தெலுங்கு படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.