மேலும் ஒரு திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று!

கொரோனா வைரஸ் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. கடந்த நான்கு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு ப்பிறப்பிக்கப்பட்டிருந்தும் கொரோனா வைரஸ் குறைந்தபாடில்லை

இந்த நிலையில் கொரோனா வைரஸால் சாதாரண பொதுமக்கள் மட்டுமின்றி பதவியில் இருக்கும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், காவல்துறையினர், மருத்துவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டும் இதில் ஒருசிலர் உயிரிழந்தும் வருகின்றனர்.

அந்த வகையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதி திமுக எம்எல்ஏ கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருக்கு கொரோனா அறிகுறி கடந்த சில நாட்களாக இருந்ததாகவும், இதனையடுத்து பரிசோதனை செய்ததில் கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் திமுக எம்.எல்.ஏ கணேசன் அவர்களுக்கு கொரோனா உறுதியான நிலையில், சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

More News

வீட்டுப்பாடம் செய்யாத சிறுமிக்கு சிறை தண்டனை: நீதிமன்றத்திற்கு குவியும் கண்டனங்கள்!

வீட்டுப்பாடம் செய்யாத சிறுமிக்கு சிறை தண்டனை என தீர்ப்பளித்த நீதிமன்றத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

ரஜினி, விஜய்யை அடுத்து அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: அதிர்ச்சி தகவல்

நடிகர் அஜித்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளதை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் அவரது வீட்டில் சோதனை செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

'ஜெயம்' படத்தில் அறிமுகமான இளம் ஹீரோவின் திருமண தேதி!

கடந்த 2002ஆம் ஆண்டு 'ஜெயம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் நிதின். இந்த திரைப்படம் தமிழில் அதே டைட்டிலில் கடந்த 2003ஆம் ஆண்டு உருவானது

கொரோனாவை வாங்க மீன்மார்க்கெட்டில் குவிந்த சென்னை மக்கள்

ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று அசைப்பிரியர்கள் மட்டன், சிக்கன் வாங்க கடைகளில் அதிக கூட்டம் கூடுவதால் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு என அரசு அறிவித்தது.

இனி தமிழகத்தில் மாவட்டப் பிரிவினை என்ற பேச்சுக்கே இடமில்லை!!! முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!!!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இனி தமிழகத்தில் எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது என தெரிவித்து இருந்தார்.