ரயில் தண்டவாளத்தில் செல்பி: துண்டு துண்டாக சிதறி பலியான 3 சென்னை இளைஞர்கள்!

  • IndiaGlitz, [Friday,April 08 2022]

ரயில் தண்டவாளத்தில் நின்று கொண்டே செல்பி எடுத்த போது எதிர்பாராத விதமாக ரயில் மோதி மூன்று சென்னை இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே துண்டு துண்டாக சிதறி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அருகே சிங்கப்பெருமாள் கோவில் அருகே அசோக், மோகன், பிரகாஷ் ஆகிய மூன்று இளைஞர்கள் ஒரே தெருவை சேர்ந்தவர்கள். இவர்கள் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை பதிவு செய்து வருவது வழக்கமாக இருந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்தும், நின்று கொண்டும் செல்பி வீடியோக்களை பதிவு செய்தனர். வீடியோக்களை பதிவு செய்யும் ஆர்வத்தில் ரயில் வருவதை அந்த இளைஞர்கள் கவனிக்கவில்லை.

இந்த நிலையில் சென்னை தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி செல்லக்கூடிய ரயில் மூன்று இளைஞர்கள் மீது பயங்கரமாக மோதியது. இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டு துண்டு துண்டாக உடல் சிதறி உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மூன்று இளைஞர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஒரே தெருவை சேர்ந்த மூன்று இளைஞர்கள் செல்பி மோகத்தால் ரயிலில் அடிபட்டு பலியான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலியான மூன்று இளைஞர்களில் அசோக்கிற்கு மட்டும் திருமணம் ஆகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

கொடைக்கானல் மலையில் வரலட்சுமி செய்த வேலையை பாருங்கள்: வைரல் வீடியோ

கொடைக்கானல் மலையில் நடிகை வரலட்சுமி தனது பட குழுவினருடன் சேர்ந்து ஆட்டம் போட்ட வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதை எடுத்து அந்த வீடியோ வைரலாகி வருகிறது 

'ஜாலியோ ஜிம்கானா' பாடலுக்கு கவர்ச்சி உடையில் செம ஆட்டம் போட்ட ஷிவானி: வீடியோ வைரல்!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

சிவகார்த்திகேயனின் 'எஸ்.கே.20' படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபலம்!

சிவகார்த்திகேயன் நடித்து வரும் 20 வது படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுந்தர் சியின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரபல இயக்குனர் சுந்தர் சி நடித்துள்ள திரைப்படத்தின் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. 

'பீஸ்ட்' முதல் நாள் முதல் காட்சி பார்ப்பேன்: முதல்வர் குடும்பத்தின் பிரபலம் பேட்டி! 

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை பார்ப்பதற்கு அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் மட்டுமின்றி