close
Choose your channels

சுந்தர் சியின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Thursday, April 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் சுந்தர் சி நடித்துள்ள திரைப்படத்தின் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் சுந்தர் சி மற்றும் ஜெய் முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படத்தை இயக்குனர் பத்ரி நாராயணன் இயக்கி வந்தார் என்பதும் இந்த படத்தை சுந்தர் சியின் அவ்னிசினி மேக்ஸ் நிறுவனம் தயாரித்து வந்தது என்பது தெரிந்ததே.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த மோஷன் போஸ்டரில் இந்த படத்திற்கு ‘பட்டாம்பூச்சி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படம் வரும் மே மாதம் ரிலீஸாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

சுந்தர் சி, ஜெய், ஹனிரோஸ் வர்கீஸ், இமான் அண்ணாச்சி உட்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படத்திற்கு நவ்நீத் இசையமைத்துள்ளார். இசக்கி கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவில் ஃபென்னி ஒலிவர் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது

இந்த நிலையில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், டிடி மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடித்து வரும் படத்தை சுந்தர் சி இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தையும் சுந்தர் சி -குஷ்புவின் அவ்னிசினி மேக்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.