மீண்டும் அனிருத், மூன்று ஹீரோயின்கள்: தனுஷின் அடுத்த படம் குறித்த தகவல்!

  • IndiaGlitz, [Monday,July 05 2021]

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது ஹாலிவுட் படத்தில் நடித்து முடித்துவிட்டு கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் என்பதும், இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

இதனை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் கலைப்புலி தாணு அவர்கள் தயாரிக்கும் ‘நானே வருவேன்’ என்ற திரைப்படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் ஒன்று உருவாக இருப்பதாகவும் செய்திகள் வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம். தற்போது இந்த இந்த படத்தை தனுஷ் நடித்த ’யாரடி நீ மோகினி’ ’குட்டி’ ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தின் மூலம் தனுஷ் மற்றும் அனிருத் மீண்டும் இணைய உள்ளனர் என்றும் இந்த படத்தில் மூன்று ஹீரோயின்கள் என்றும் மூவருமே பிரபலமான ஹீரோயின்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பிரபல நடிகர் ஒருவரும் நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது. ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

தனுஷின் அடுத்தடுத்த படங்கள் குறித்து அப்டேட்கள் வந்து கொண்டே இருப்பதால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சியில் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

வைட்டமின் மாத்திரைகள் Immune systemsystem-ஐ வலிமை ஆக்குமா?

கொரோனா நேரத்தில் சிலர் வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடுவதை வாடிக்கையாகவே ஆக்கிவிட்டனர்.

சுயஇன்பம் செய்தால் நோய் எதிர்ப்பு ஆற்றல் கூடுமா? மருத்துவரின் பதில்!

கொரோனா வைரஸ் உலகத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு கொடிய நோய்த்தொற்றாக பரவிவருகிறது.

குடும்பத்தோடு கடற்கரையில் காற்று வாங்கும் ரொனால்டோ… செம வைரல் புகைப்படம்!

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரரும் போர்ச்சுகல் அணியின் கேப்டனுமான கிறிஸ்டியானோ ரொனால்டா

மாதச்சம்பளம் எவ்வளவு வேண்டும்? டிக்டாக் இலக்கியாவிடம் பேரம் பேசும் ரெளடிபேபி சூர்யா!

டிக்டாக் பிரபலம் இலக்கியாவிடம் 'என்னுடன் சிங்கப்பூர் வரை உனக்கு மாத சம்பளம் எவ்வளவு வேண்டும்? என ரவுடி பேபி சூர்யா பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது பெரும் பரபரப்பை

ஹேட்டர்களுக்கு ப்ரியா அட்லியின் அதிரடி பதில்!

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான அட்லி தளபதி விஜய் நடித்த 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' என 3 சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.