close
Choose your channels

டீசரில் கூட வெளியாகாத மதுராந்தகர், சுந்தர சோழர் கேரக்டர்கள்: லைகா வெளியிட்ட வீடியோ

Sunday, September 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இம்மாதம் 30ஆம் தேதி தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பதும் குறிப்பாக வரும் 6ஆம் தேதி இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பிரமாண்டமாக நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் கேரக்டர்கள் புகைப்படங்கள் வீடியோக்களை அவ்வப்போது லைகா நிறுவனம் வெளியிட்டு வரும் நிலையில் நேற்று இந்த படத்தில் வானதி கேரக்டரில் நடித்த சுபிதா துலிபாலா போஸ்டரும், பூங்குழலி கேரக்டரில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி போஸ்டரும் வெளியானது.

இந்த நிலையில் லைகா நிறுவனம் சற்றுமுன் டீசரில் கூட வெளியாகாத சுந்தர சோழன், மதுராந்தகன் மற்றும் செம்பியன் மாதேவி ஆகிய கேரக்டர்களின் புகைப்படங்களை வீடியோவாக வெளியிட்டு லைகா நிறுவனம் வைரலாக்கியுள்ளது. சுந்தரசோழர் கேரக்டரில் பிரகாஷ்ராஜ், மதுராந்தகன் கேரக்டரில் ரகுமான் மற்றும் செம்பியன்மாதேவி கேரக்டரில் ஜெயசித்ரா ஆகியோர் நடித்திருக்கும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment