close
Choose your channels

'மாமன்னன்' உள்பட 3 தமிழ்ப்படங்கள்.. இந்த வார ஓடிடி ரிலீஸ் தகவல்கள்..!

Thursday, July 27, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் குறைந்தபட்சம் நான்கு திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் ஒரே மாதத்தில் ஓடிடியிலும் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இந்த வாரம் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ’மாமன்னன்’ உள்பட 3 தமிழ் திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகியுள்ளன.

’மாமன்னன்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் 50 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் நாளை வெளியாக உள்ளது.

அதேபோல் சுனைனா நடித்த ’ரெஜினா’ என்ற திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜியோ சினிமாவில் ஊர்வசி முக்கிய வேடத்தில் நடித்த பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவான ’அப்பத்தா’ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த மூன்று தமிழ் படங்களை அடுத்து ’ஸ்பை’ என்ற தெலுங்கு திரைப்படம் அமேசான் ப்ரைமிலும் மற்றும் ’போலீஸ் ஸ்டோரி கேஸ் 1 ‘ என்ற தெலுங்கு திரைப்படம் இடிவி வின் என்ற ஓடிடியிலும் வெளியாகவுள்ளது.

மேலும் ‘கொல்லா’ என்ற மலையாள திரைப்படம் மனோரமா மேக்ஸ் ஓடிடியிலும், ஆஹா ஓடிடியில் ’Samajavaragamana’ என்ற தெலுங்கு திரைப்படம் வெளியாகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment