3 தமிழ்ப்படங்கள், ஒரு அஜித் ரீமேக் படம்.. இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
இந்த வாரம் ஓடிடியில் மூன்று தமிழ் படங்கள் மற்றும் அஜித்தின் ’வேதாளம்’ படத்தின் தெலுங்கு ரீமேக் படமான ’போலோ சங்கர்’ ஆகிய படங்கள் வெளியாக இருப்பதால் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது.
ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படங்கள் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் வெளியாகும் ஓடிடி படங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.
கடந்த ஜூலை மாதம் அர்ஜுன் தாஸ் நடிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் உருவான ’அநீதி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் ஆஹா மற்றும் சிம்ப்ளி சவுத் ஆகிய ஓடிடியில் வெளியாக உள்ளது.
அதேபோல் தமிழில் உருவான My3 என்ற ஹாட்ஸ்டார் சீரிஸ் இந்த வாரம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது. மேலும் சிம்ப்ளி சவுத் ஓடிடியில் ’டைனோசர்ஸ்’ என்ற தமிழ் படம் வெளியாக உள்ளது. உதய் கார்த்திக், ரிஷி ரித்விக், சாய்பிரியா தேவா நடித்த இந்த படம் திரையரங்குகளில் கடந்த ஜூலையில் வெளியானது
அதுமட்டுமின்றி அஜித்தின் ’வேதாளம்’ படத்தின் தெலுங்கு ரீமேக் படமான சிரஞ்சீவி நடித்த ’போலோ சங்கர்’ இந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ‘ராமபனம்’ என்ற தெலுங்கு திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில், ‘டிஜிட்டல் வில்லேஜ்’ என்ற மலையாள படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில், ‘18 பிளஸ்’ என்ற மலையாள படம் சோனி லைவ் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments