இந்த வாரம் 3 தமிழ் படங்கள்.. ஓடிடி ரிலீஸ் குறித்த முழு தகவல்கள்..!

  • IndiaGlitz, [Thursday,July 20 2023]

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி கொண்டிருக்கும் நிலையில் திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் அடுத்த ஒரே மாதத்தில் ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் இந்த வாரம் 3 தமிழ் படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வார ஓடிடி ரிலீஸ் குறித்த முழு தகவல்களை தற்போது பார்ப்போம்

இந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ‘அஸ்வின்ஸ்’ என்ற படம் வெளியாகிறது. த்ரில் கதை அம்சம் கொண்ட இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மனதை வென்ற நிலையில் ஓடிடியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வசந்த் ரவி, விமலா ராமன், சிம்ரன் பரீக், முரளிதரன், சரஸ்வதி மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் தருண் தேஜா இயக்கத்தில் விஜய் சித்தார்த் இசையில் இந்த படம் உருவாகி உள்ளது.

அதேபோல் விக்ரம் பிரபு, வாணி போஜன் நடித்த ’பாயும்புலி நீ எனக்கு’ என்ற திரைப்படம் சிம்ப்ளி சவுத் என்ற ஓடிடியில் வெளியாக உள்ளது. மேலும் ’சிங்க்’ என்ற தமிழ்ப்படம் ஆஹா ஓடிடியில் வெளியாகவுள்ளது. கிஷேன் தாஸ், மோனிகா, செளந்தர்யா நந்தகுமார், நவீன் நடிப்பில் விகாஸ் ஆனந்த் இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.

மேலும் 'Bawaal’ என்ற இந்திப்படம் அமேசான் ப்ரைமில், DoGubbare என்ற இந்திப்படம் ஜியோ சினிமாவில், Aashiqana S4 என்ற வெப்தொடர் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது. ’The Deepest Breat’ மற்றும் ’Sweet Magnolias’ ஆகிய ஆங்கில படங்கள் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

More News

குழந்தை பிறப்பை லைவ் வீடியோவாக வெளியிட்ட 'மாஸ்டர்' பட நடிகை..!

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'மாஸ்டர்' திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் தான் குழந்தை பெற்றுக் கொள்வதை லைவ் வீடியோவாக தனது சமூக வலைதளத்தில்

'96' படத்தில் நடித்தவரா இவர்? வைரலாகும் மாலத்தீவு புகைப்படங்கள்..!

விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த '96' என்ற திரைப்படத்தில் சிறு வயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் கௌரி கிஷான். இந்த நிலையில் தற்போது அவர் மாலத்தீவில் இருந்து கிளாமர் புகைப்படங்களை தனது சமூக

மனித வரலாற்றில் பேரவலம் மன்னிக்க முடியாத பெருங்குற்றம்.. ஜிவி பிரகாஷ் ஆவேசம்..!

மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு நிகழ்ந்த கொடூரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்  மனித வரலாற்றில் பேரவலம் என்றும் மன்னிக்க முடியாத பெரும் குற்றம் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவையே புரட்டி போட்ட மணிபூர் நிர்வாண ஊர்வலம்? சினிமா பிரபலங்கள் எதிர்ப்பு…!

கடந்த மே மாதத்தின் துவக்கத்தில் இருந்தே மணிப்பூர் மாநிலத்தில் கொடூரமான வன்முறைகளும் கலவரங்களும் வெடித்து வருகின்றன. இந்நிலையில் தற்போது இணைய வசதிகள் சரிசெய்யப்பட்டு இருக்கும் நிலையில

இந்தியாவில் அதிக வருமான வரி செலுத்தும் நடிகை யார் தெரியுமா? நம்பவே முடியாத தகவல்…!

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை ஒருவர் ஆண்டுக்கு ரூ.10 கோடிக்கும் மேல் வருமான வரி செலுத்துவதாகத் தகவல் வெளியாகி இருக்கும் நிலையில்