close
Choose your channels

தப்பு யார் செஞ்சிருந்தாலும் அவங்க தப்பானவங்க தான்.. விமலின் 'துடிக்கும் கரங்கள்' டிரைலர்..!

Wednesday, August 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விமல் நடித்த ’துடிக்கும் கரங்கள்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸ்-க்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

விமல் இந்த படத்தில் அதிரடி ஆக்ஷன் கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் கொலை மற்றும் கஞ்சா கடத்தும் கும்பலை கண்டுபிடிக்க உதவி செய்கிறார் என்பதும் ட்ரைலரில் இருந்து தெரிய வருகிறது.

விமல் ஜோடியாக மிஷா நரங், சுரேஷ் மேனன், சதீஷ் நடித்துள்ள இந்த படத்தை வேலுதாஸ் என்பவர் இயக்கி உள்ளார். ராகவ் பிரசாத் இசையில் ராமே ஒளிப்பதிவில் லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படம் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒரு அதிரடி ஆக்சன் படத்தில் விமல் நடித்துள்ளதை அடுத்து இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.