close
Choose your channels

'தக்லைஃப்' படத்தின் மாஸ் போஸ்டர்.. சிம்பு ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!

Wednesday, May 8, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பு சமீபத்தில் டெல்லியில் நடந்தது என்பதையும் பார்த்தோம்

இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு இந்த படத்தில் சிம்பு இணைந்துள்ள அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று முன் வெளியான போஸ்டர் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

'தக்லைஃப்’ படத்தின் அட்டகாசமான போஸ்டரில் சிம்பு துப்பாக்கியை கையில் வைத்துக்கொண்டு ஸ்டைலாக இருக்கும் காட்சியை இருப்பதை அடுத்து சிம்பு ரசிகர்களுக்கு இந்த போஸ்டர் செம்ம விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் சிம்புவின் லுக் அட்டகாசமாக இருப்பதாகவும் நிச்சயம் சிம்புவுக்கு இந்த படம் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் 'தக்லைஃப்’ படத்தின் டெல்லி படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்த கட்டமாக வெளிநாட்டிற்கு செல்ல படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கமல்ஹாசன், சிம்பு உள்பட படக்குழுவினர் அனைவரும் இன்னும் ஒரு சில நாட்களில் வெளிநாடு செல்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.