close
Choose your channels

'தக்லைஃப்' படப்பிடிப்பு நடைபெறுவது இந்த புகழ்பெற்ற கோவிலிலா? இணையத்தில் கசிந்த புகைப்படம்..!

Tuesday, May 7, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருவதாக கூறப்பட்ட நிலையில் டெல்லியில் உள்ள பிரபலமான கோவிலில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக புகைப்படம் கசிந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களாக ’தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பை மணிரத்னம் நடத்தி வரும் நிலையில் தேர்தல் பிரச்சார பணி காரணமாக கமல்ஹாசன் கலந்து கொள்ளவில்லை என்றும் தற்போது டெல்லியில் நடைபெறும் படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

டெல்லியில் நடைபெறும் படப்பிடிப்பில் கமல்ஹாசன் உடன் சிம்பு, த்ரிஷா, ஜோஜூ ஜார்ஜ், கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி, நாசர், வையாபுரி, அலி பைசல், பங்கஜ் திரிபாதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு இருப்பதாகவும் இந்த படப்பிடிப்பில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியானது.

மேலும் இது குறித்த புகைப்படம் கசிந்துள்ள நிலையில் தற்போது டெல்லியில் படப்பிடிப்பு நடைபெறும் இடம் புகழ்பெற்ற சங்கத் மோட்சம் அனுமான் கோவில் என்று தெரியவந்துள்ளது. இந்த கோவிலில் தான் கடந்த இரண்டு நாட்களாக ’தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறப்படும் நிலையில் இன்னும் சில நாட்கள் இந்த கோவிலில் படப்பிடிப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.