close
Choose your channels

'பிக்பாஸ் தமிழ் : கடந்த சீசனில் மிஸ்ஸான டிக்டாக் பிரபலம் இந்த சீசனில் உறுதியா?

Monday, October 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் அக்டோபர் 9ஆம் தேதி முதல் 6வது சீசன் தொடங்க உள்ளது என்பதும் இந்த சீசனுக்கான விளம்பர வீடியோக்கள் வெளியாகி வருகின்றன என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் பிக்பாஸ் 6 வது சீசனில் பல தொலைக்காட்சி மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டது. குறிப்பாக விஜய் டிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்ஷா குப்தா, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஜலட்சுமி, மைனா நந்தினி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் மணிகண்டன், அமுதவாணன் உள்பட பலர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது உள்ள தகவலின்படி டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே கடந்த சீசனில் ஜிபி முத்து கலந்து கொள்வார் என்று கூறப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை இழந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த சீசனில் அவர் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

நெல்லை தமிழில் காமெடியாகவும், சில சமயம் சர்ச்சைக்குரிய வகையிலும் பேசும் ஜிபி முத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment