"ஸ்டாலின் தான் வராரு" பாடல் இசையமைப்பாளருக்கு திருமணம்.....! முதல்வர் நேரில் சென்று வாழ்த்து....!

திமுக- வின் ஸ்டாலின் தான் வராரு என்ற பாடலை இசையமைத்த, ஜெரார்டு ஃபெலிக்ஸ்-ன் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்ட முதல்வர், தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை கூறினார்.

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. தேர்தலுக்கு முன் பல்வேறு கட்சிகள் சார்பாக வெளியான பாடல்களிலே, ஸ்டாலின் தான் வராரு, நல்லாட்சி தரப்போறாரு என்ற பாடல் தான் மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்த பாடலாக அமைந்தது. யுடியூப் தளத்தில் பல மில்லியன் மக்களால் பார்க்கப்பட்டு, ரசிக்கப்பட்ட பாடலும் இதுவே. ரசிகர்கள் பலரும் இந்த பாடலை ரிங்-டோனாக வைத்திருந்தனர். அந்த அளவிற்கு பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது இப்பாடல். இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் இசையமைப்பாளர் ஜெரார்டு ஃபெலிக்ஸ் தான்.

தேர்தல் வெற்றிக்குப்பின் எதிர்கட்சியினரையே இந்தபாடல் வாயில் முணுமுணுக்க வைத்துவிட்டது. முதன் முறையாக பாடலை கேட்கும் போது திமுக தொண்டர்கள், உற்சாகமாக நடனமாடினார்கள், அதுதான் பாடலுக்கு கிடைத்த வெற்றி என ஃபெலிக்ஸ் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

இந்நிலையில் ஜெரார்டு ஃபெலிக்ஸ், சாந்தனா- வின் திருமண வரவேற்பு விழா இன்று நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில் மாண்புமிகு முதல்வர் முக.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தினர். இப்பாடலுக்கு வரிகள் எழுதியவர் மதன் கார்க்கி. இவரது குடும்பத்தில் இருந்து கவிஞர் வைரமுத்துவும், அவரது மகன்களும் கலந்து கொண்டு வாழ்த்தினர். இத்திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்க முதல்வரான மம்தா பேனர்ஜியின், தேர்தல் பிரச்சார பாடலை இசையமைத்தவரும் இசையமைப்பாளர் ஜெரார்டு ஃபெலிக்ஸ் தான். கடந்த 2019 -இல் வெளியான மயூரான் என்ற படத்தின் இசையமைப்பாளர்களில், பெலிக்ஸ்-ம் ஒருவராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சூர்யா பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம விருந்து!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யாவின் பிறந்த நாள் வரும் 23-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் அன்றைய தினம் ரசிகர்களுக்கு செம விருந்து ஒன்று காத்திருப்பதாக

கணவரின் உடலை சுடுகாடு வரை சுமந்து சென்ற மந்த்ராபேடி: வைரல் புகைப்படங்கள்!

தமிழில் சிம்பு நடித்த 'மன்மதன்' ஜிவி பிரகாஷ் நடித்த 'அடங்காதே' உள்பட ஒரு சில படங்களிலும் பல பாலிவுட் படங்களிலும் நடித்தவர் நடிகை மந்திரா பேடி. இவருடைய கணவர் ராஜ்குஷால் கடந்த இரண்டு

"மன்மதன்" ரிட்டர்ன்ஸ்.....! இணையத்தில் வைரலாகும் சிம்பு புகைப்படங்கள்...!

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம்தான் மாநாடு. இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்

ரம்யா பாண்டியனின் உதட்டை கடித்து முத்தம்: வைரல் வீடியோ

'குக் வித் கோமாளி சீசன் 1'  மற்றும் பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான ரம்யா பாண்டியன் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார் என்பதும் குறிப்பாக

வசீகரத் தோற்றம் கொண்ட ரொனால்டோவின் டயட் சீக்ரெட்… 36 வயதில் செம ஃபிட் எப்படி?

உலகில் அதிக ரசிகர்களைக் கொண்ட கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சமீபத்தில் கலந்து கொண்ட செய்தியாளர்கள் சந்திப்பில் தனக்கு முன்னாள் வைக்கப்பட்டு இருந்த கோக் பாட்டிலை எடுத்து ஓரமாக வைத்தார்