close
Choose your channels

"ஸ்டாலின் தான் வராரு" பாடல் இசையமைப்பாளருக்கு திருமணம்.....! முதல்வர் நேரில் சென்று வாழ்த்து....!

Friday, July 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திமுக- வின் "ஸ்டாலின் தான் வராரு" என்ற பாடலை இசையமைத்த, ஜெரார்டு ஃபெலிக்ஸ்-ன் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்ட முதல்வர், தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை கூறினார்.

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. தேர்தலுக்கு முன் பல்வேறு கட்சிகள் சார்பாக வெளியான பாடல்களிலே, "ஸ்டாலின் தான் வராரு, நல்லாட்சி தரப்போறாரு" என்ற பாடல் தான் மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்த பாடலாக அமைந்தது. யுடியூப் தளத்தில் பல மில்லியன் மக்களால் பார்க்கப்பட்டு, ரசிக்கப்பட்ட பாடலும் இதுவே. ரசிகர்கள் பலரும் இந்த பாடலை ரிங்-டோனாக வைத்திருந்தனர். அந்த அளவிற்கு பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது இப்பாடல். இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் இசையமைப்பாளர் ஜெரார்டு ஃபெலிக்ஸ் தான்.

தேர்தல் வெற்றிக்குப்பின் எதிர்கட்சியினரையே இந்தபாடல் வாயில் முணுமுணுக்க வைத்துவிட்டது. முதன் முறையாக பாடலை கேட்கும் போது திமுக தொண்டர்கள், உற்சாகமாக நடனமாடினார்கள், அதுதான் பாடலுக்கு கிடைத்த வெற்றி என ஃபெலிக்ஸ் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

இந்நிலையில் ஜெரார்டு ஃபெலிக்ஸ், சாந்தனா- வின் திருமண வரவேற்பு விழா இன்று நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில் மாண்புமிகு முதல்வர் முக.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தினர். இப்பாடலுக்கு வரிகள் எழுதியவர் மதன் கார்க்கி. இவரது குடும்பத்தில் இருந்து கவிஞர் வைரமுத்துவும், அவரது மகன்களும் கலந்து கொண்டு வாழ்த்தினர். இத்திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்க முதல்வரான மம்தா பேனர்ஜியின், தேர்தல் பிரச்சார பாடலை இசையமைத்தவரும் இசையமைப்பாளர் ஜெரார்டு ஃபெலிக்ஸ் தான். கடந்த 2019 -இல் வெளியான "மயூரான்" என்ற படத்தின் இசையமைப்பாளர்களில், பெலிக்ஸ்-ம் ஒருவராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.