ஜூலை 6 முதல் சென்னையில் என்னென்ன கட்டுப்பாடுகள், தளர்வுகள்: முதல்வர் அறிவிப்பு

சென்னையில் ஜூலை 5 வரை முழு முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜூலை 6 முதல் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதன்படி ஜூலை 6 முதல் சென்னையில் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல்கள் மட்டும் வழங்கலாம். அதேபோல் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட உணவகங்களில் காலை 6 முதல் இரவு 9 மணி வரை பார்சல் வழங்க அனுமதிக்கப்படும். மேலும் தொலைபேசியில் ஆர்டர் செய்து வீடுகளுக்கு உணவு வழங்கும் சேவைக்கு இரவு 9 மணி வரை அனுமதி உண்டு.

அதேபோல் காய்கறிக்கடைகள், மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதி என்றும் வணிக வளாகங்கள் தவிர்த்து ஷோரூம்கள், பெரிய கடைகள், ஜவுளி, நகைக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை செயல்படலாம் என்றும் முதல்வரின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More News

சும்மா கெத்தா சொல்வோம்: சூப்பர் ஸ்டார் ரஜினி ஆந்த்தம் பாடிய சிம்பு

நடிகர் சிம்பு பாடிய சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஆந்த்தம் சற்றுமுன் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா சிகிச்சைக்கு சீனா கையாளும் புது டெக்னிக்!!!

பழைய மருத்துவ முறைகளை சீனா பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.

கன்னித்தன்மையை இழக்க துடிக்கும் நாயகி: ரசிகர்கள் கொந்தளிப்பு

இன்ஸ்டாகிராமில் சுமார் 3 கோடிக்கும் மேல் ஃபாலோயர்களை பெற்ற நடிகை ஊர்வசி ரவுத்தேலா  அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை

மதுரையில் மட்டும் முழு முடக்கம் திடீர் நீட்டிப்பு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

மதுரையில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வந்ததை அடுத்து சமீபத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஜூலை 5 வரை மதுரையில் முழு ஊரடங்கு என அமல்படுத்தப்பட்டுள்ள

இந்தியாவில் ஆகஸ்ட் 15 க்குள்ள கொரோனா தடுப்பூசி: இதில் இருக்கும் சிக்கல் என்ன???

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி பற்றிய செய்திகள் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன