close
Choose your channels

இன்று 'கோட்' பிரசாந்த் பிறந்தநாள்.. வாழ்த்து கூறினாரா தளபதி விஜய்?

Saturday, April 6, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து ‘கோட்’ கோட் படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் பிரசாந்த் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர் நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி பிரசாந்த் நடித்து வரும் ‘கோட்’ படத்தின் அவரது கேரக்டருடன் கூடிய புதிய போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் இன்று பிறந்தநாளை கொண்டாடி வரும் பிரசாந்த் செய்தியாளர்களை சந்தித்தபோது ’தளபதி விஜய் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதாகவும் படப்பிடிப்பு மிகவும் அருமையாக நடந்து கொண்டிருக்கிறது என்றும் படம் நன்றாக வந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்

‘கோட்’ படத்தின் ஒரு சிங்கிள் காட்சிகள் கூட இணையத்தில் லீக் ஆகாமல் இருப்பது நல்ல விஷயம் என்றும் படத்தை மிகவும் பாதுகாப்பாக எடுத்து வருகிறார்கள் என்பது இதன் மூலம் தெரிகிறது என்றும் தெரிவித்தார். மேலும் இந்த படத்தில் உள்ள அனைவருக்குமே மிகச் சிறந்த கேரக்டர்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு விருந்தாக இருக்கும் என்றும் கூறினார்.

விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பார்வதி நாயர், மோகன், ஜெயராம், அஜ்மல், யோகிபாபு, விடிவி கணேஷ், வைபவ், பிரேம்ஜி, கஞ்சா கருப்பு உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். யுவன்ஷங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.