'குக் வித் கோமாளி' கிராண்ட் ஃபினாலே: ஷிவாங்கி பதிவு செய்த உருக்கமான டுவீட்

கடந்த சில மாதங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ’குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சி இன்றுடன் முடிவடைகிறது. இன்று மதியம் 2 மணிக்கு 5 மணி நேர நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது என்பதும் இன்றைய நிகழ்ச்சியின் இறுதியில் டைட்டில் வின்னர் யார் என்பது தெரியவரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கனி தான் டைட்டில் வின்னர் என செய்திகள் வெளிவந்த நிலையில் ஷகிலா மற்றும் அஸ்வின் ஆகிய இருவரும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்றுடன் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவடைவதை அடுத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோமாளிகளில் ஒருவரான ஷிவாங்கி தனது டுவிட்டர் பக்கத்தில் நிகழ்ச்சியான ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார்.

’குக் வித் கோமாளி சீசன் 2வின் கிராண்ட் பினாலே இன்று. இதுதான் கடைசி எபிசோடு என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. இந்த பயணத்தை நான் மிகவும் நேசிக்கிறேன். எங்களுக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் எனது நன்றி’ என்று கூறியுள்ளார்.

More News

'அந்நியன்' படத்தின் இந்தி ரீமேக்: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஷங்கர்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான 'அந்நியன்' திரைப்படம் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே

கும்பமேளா திருவிழாவில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்: காற்றில் பறக்கவிடப்பட்ட கொரோனா விதிமுறைகள்!

இந்துக்களின் புனித நிகழ்வுகளில் ஒன்றான கும்பமேளாவில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கங்கை நதியில் குளிப்பது உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதால் கொரோனா தொற்று

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் செந்திலின் வீடியோ வைரல்!

காமெடி நடிகர் செந்தில் சமீபத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

அதெலட்டிக் வீராங்கனை தனலட்சுமிக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த பரிசு

பிரபல அதெலடிக் வீராங்கனை தனலட்சுமிக்கு சிவகார்த்திகேயன் பரிசு கொடுத்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது 

நாளை மூக்குத்தி அம்மனை பார்க்க வைக்க ஆர்ஜே பாலாஜி செய்யும் தந்திரம்: சர்ச்சைக்கு உள்ளாகுமா?

நடிகர் ஆர்ஜே பாலாஜி நடித்து இயக்கிய 'மூக்குத்தி அம்மன்' என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஓடிடியில் ரிலீஸ் ஆனது என்பதும் இந்த திரைப்படம் பொதுமக்கள்