கடந்த 10 நாட்களில் குறைவான கொரோனா பாதிப்பு: மீண்டு வரும் தமிழகம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 700க்கும் மேற்பட்டோர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்படுத்திய நிலையில் நேற்று 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கொஞ்சம் நிம்மதி அடைந்தனர். இந்த நிலையில் நேற்றைவிட இன்று மேலும் கொரோனாவின் பாதிப்பு குறைந்துள்ளது.

தமிழகத்தில் இன்று 447 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9674ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 447 பேர்களில் 363 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும் இதனையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆக 5625ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் இன்று கொரோனாவில் இருந்து 64 பேர்கள் குணமாகியுள்ளதால் தமிழகத்தில் மொத்தம் 2240 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ள்னர். அதேபோல் இன்று மட்டும் தமிழகத்தில் 11,956 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இன்று தமிழகத்தில் கொரோனாவால் 2 பேர் பலியாகியுள்ளதால் தமிழகத்தின் மொத்த பலி எண்ணிக்கை 66ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

More News

ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஒரு கிலோ கொண்டைக்கடலை இலவசம்: நிர்மலா சீதாராமன்

பாரத பிரதமர் நரேந்திரமோடி சமீபத்தில் நாட்டு மக்களிடையே உரையாடியபோது ரூ.20 லட்சம் கோடிக்கான நலத்திட்டங்களை நிதியமைச்சர் அறிவிப்பார் என்று கூறினார்.

கொரோனா சர்ச்சையில் அமெரிக்காவுடன் கைக்கோர்க்கிறதா இந்தியா???

உலகம் முழுவதும் கொரோனா  வைரஸ் பரவல் கடும் நோய்த் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

தனிமைப்படுத்திய விவகாரம்: நடிகர் ராதாரவி விளக்கம்!

நடிகர் ராதாரவி சமீபத்தில் சென்னையில் இருந்து கோத்தகிரியில் உள்ள தனது வீட்டிற்கு குடும்பத்தினர்களுடன் சென்றதாகவும், அதன் பின்னர் அவர் அங்குள்ள சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி

சலூன் கடைக்காரரின் மகளான கல்லூரி மாணவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பார்த்திபன்

மதுரையைச் சேர்ந்த சலூன் கடைக்காரர் ஒருவர் தனது மகளின் மேற்படிப்பிற்காக சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த ரூபாய் ஐந்து லட்சத்தை தனது பகுதியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட

சோதனை தேவையில்லை: மாஸ்க்கை வைத்து கொரோனா நோயாளியை கண்டுபிடிக்கும் டெக்னாலஜி

தற்போது கொரோனா நோயாளியை உறுதி செய்ய வேண்டும் என்றால் அவருடைய இரத்தம் பரிசோதனை செய்த பின்னர் தான் சொல்ல முடியும். ஆனால் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்