close
Choose your channels

தளபதி விஜய் ரசிகர்களுக்கு இன்று முதல் கொண்டாட்டம்.. செம அறிவிப்பு!

Monday, January 30, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் பிப்ரவரி 1, 2, 3 என்று கூறியுள்ளதை அடுத்து பிப்ரவரி மாதம் விஜய் ரசிகர்களுக்கு செம அப்டேட் உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ’தளபதி 67’ படத்தை தயாரித்து வரும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சற்று முன் இன்று மாலை 6.07 மணிக்கு அப்டேட் என அறிவித்துள்ளது. மேலும் இந்த பதிவில் சில புள்ளிகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் அந்த புள்ளிகளை எண்ணி அதில் 67 புள்ளிகள் இருப்பதாக குறிப்பிட்டு ’தளபதி 67’ படத்தின் அறிவிப்புதான் இன்று வெளியாக போகிறது என கணித்துள்ளனர். இந்த கணிப்பு சரியாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று முதல் இன்னும் ஒரு சில நாட்களுக்கு ’தளபதி 67’ படத்தின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் விஜய் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் ஜோடியாக த்ரிஷா நடித்துவரும் இந்த படத்தில் சஞ்சய் தத், கெளதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்து வருவதாகவும், இந்த படத்தில் சிம்புவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அனிருத் திசையில் உருவாகி வரும் இந்த படம் தமிழ் சினிமா இதுவரை கண்டிராத அளவில் மிகப்பெரிய வியாபாரத்தை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos