ஒரு வருடம் தள்ளிப்போகும் 'மிஷன் இம்பாஸிபிள்' அடுத்தடுத்த பாகங்கள்: ரசிகர்கள் அதிருப்தி!

  • IndiaGlitz, [Saturday,January 22 2022]

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் நடித்த ’மிஷன் இம்பாஸிபிள்’ படத்தின் ஏழாம் பாகம் மற்றும் எட்டாம் பாகம் படங்களின் ரிலீஸ் தேதி ஒரு வருடம் தள்ளிப்போனதாக தகவல் வெளிவந்துள்ளதை அடுத்து ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்

ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் நடித்த மிஷின் இம்பாசிபிள் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 1994-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இதுவரை 6 பாகங்கள் வெளியாகி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’மிஷன் இம்பாஸிபிள்’ படத்தின் ஏழாம் பாகம் இந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தள்ளிப்போனதால் அடுத்த ஆண்டு அதாவது 2023 ஆம் ஆண்டு ஜூலை 14-ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது

அதேபோல் ’மிஷன் இம்பாஸிபிள்’ படத்தின் எட்டாம் பாகம் 2023 ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மிஷன் இம்பாஸிபிள்’ பாகம் 7 மற்றும் 8 ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரு வருடம் தள்ளிப்போனதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

More News

ஹீரோவான 'மாஸ்டர்' மகேந்திரன்: டைட்டில் அறிவிப்பு

சரத்குமார் நடித்த 'நாட்டாமை' என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மகேந்திரன், தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் வரை பல படங்களில் நடித்து வந்துள்ளார்.

சமந்தா, ரெஜினாவை அடுத்து ஐட்டம் டான்ஸ் ஆடிய வனிதா: வைரல் வீடியோ

'புஷ்பா' திரைப்படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடிய சமந்தா மற்றும் 'ஆச்சார்யா' திரைப்படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடிய ரெஜினா ஆகியோர்களின் வீடியோக்கள் இணையதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பது தெரிந்ததே

சசிகுமார் ஸ்டைலில் சிரிக்கும் பிரியங்கா: வீடியோவை வெளியிட்ட ராஜலட்சுமி!

பிரபல தொகுப்பாளினியும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான பிரியங்கா, நடிகரும் இயக்குனருமான சசிகுமார் ஸ்டைலில் சிரிக்கும் வீடியோவை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட

சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு விளையாட்டில் சமந்தா: வைரல் வீடியோ

நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக சுவிட்சர்லாந்தில் தனது தோழியுடன் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்பதும் அது குறித்த புகைப்படத்தை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்த நிலையில்

பொய் சொன்னது யார்? விளக்கம்கேட்டு கோலிக்கு நோட்டிஸ் அனுப்ப நினைக்கும் கங்குலி!

கேப்டன்சி விவகாரம் தொடர்பாக விராட் கோலிக்கும் பிசிசிஐயின்