close
Choose your channels

சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு விளையாட்டில் சமந்தா: வைரல் வீடியோ

Saturday, January 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக சுவிட்சர்லாந்தில் தனது தோழியுடன் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்பதும் அது குறித்த புகைப்படத்தை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்த நிலையில் அந்தப் புகைப்படத்திற்கு இலட்சக்கணக்கில் லைக்ஸ் குவிந்தது என்பதையும் பார்த்தோம்

இந்த நிலையில் சற்று முன்னர் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். மிகத் தேர்ந்த பனிச்சறுக்கு வீராங்கனை போன்று அவர் பனிச்சறுக்கு செய்யும் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

இந்த வீடியோ பதிவு செய்து ஒரு சில மணி நேரங்களில் 7 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது என்பதும், சமந்தா மிகவும் லாவகமாக பனிச்சறுக்கு செய்வதை பார்க்கும்போது அவர் இதுகுறித்து போட்டியிலும் கலந்து கொண்டால் தங்கப்பதக்கத்தை வெல்வார் என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகை சமந்தா, ‘சாகுந்தலம்’, ’யசோதா’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் என்பதும் அவர் நடித்து முடித்துள்ள ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் ’தி ஃபேமிலிமேன் 2’ தொடரை இயக்கிய ராஜ்&டிகே இயக்கத்தில் ஒரு தொடரிலும், தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகும் 2 புதிய படங்களில் நடிக்க சமீபத்தில் சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.