close
Choose your channels

ரஜினி ரசிகர்களுக்கு நாளை ஒரு சர்ப்ரைஸ்.. முக்கிய அறிவிப்பு வெளியாகவுள்ளதாக தகவல்..!

Friday, August 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் கடந்த பத்தாம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் 525 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது என்பதும் தெரிந்ததே.

மேலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த ’லால் சலாம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதால் இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’தலைவர் 170’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் நாளை இந்த படத்தின் பூஜை நடைபெற இருப்பதாக கூறப்படுவது ரஜினி ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் தகவலாக உள்ளது.

நாளை சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ’தலைவர் 170’ படத்தின் பூஜை நடைபெறும் என்றும் இந்த பூஜையில் ரஜினிகாந்த் உட்பட படக்குழுவினர் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் அமிதாப்பச்சன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்றும் பகத் பாசில் வில்லனாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. போலி எண்கவுண்டர்கள் குறித்த கதையம்சம் கொண்ட இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

’ஜெய்பீம்’ போல இதுவும் ஒரு சமூக கருத்தை வலிமையாக எடுத்து சொல்லும் படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் பாடல்களையும் பட்டையை கிளப்பும் வகையில் அவர் கம்போஸ் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment