அதை மட்டும் கண்ட்ரோல் செய்தால் ஒரு லட்சம் டாலர் பரிசு: வேற லெவல் பிக்பாஸ்

இந்தியாவில் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது போல் தற்போது ஹாலிவுட்டில் வயது வந்தவர்களுக்கான ஒரு பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘ டூ ஹாட் டு ஹேண்டில்’ என்ற டைட்டிலில் இந்த நிகழ்ச்சி விரைவில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பத்து இளம் பெண்கள் மற்றும் பத்து வாலிபர்கள் ஒரு சொகுசு வில்லாவில் அடைக்கப்பட்டு இருப்பார்கள்.

அவர்கள் அந்த வில்லாவில் 4 வாரங்கள் இருக்க வேண்டும். அவர்களுக்குள் டேட்டிங் போன்ற உறவுகள் இருக்கலாம். ஆனால் அதே நேரத்தில் ஒரு கண்டிஷன். போட்டியாளர்கள் யாரும் முத்தம், உடலுறவு உள்பட எந்த வித பாலியல் செயல்களிலும் ஈடுபடக்கூடாது.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர் பரிசு என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹாட்டான நிகழ்ச்சியை லானா என்பவர் தொகுத்து வழங்க உள்ளார். அவர் போட்டியாளர்களுக்கு விதவிதமான டாஸ்குகளை கொடுப்பார். இந்த டாஸ்குகளை சரியாக செய்யாமல் இருப்பவர்கள் மற்றும் விதிகளை மீறுபவர்களுக்கு அவர்களுடைய பரிசுத் தொகை குறைய தொடங்கும்.

இறுதி போட்டிக்கு தகுதி பெறும் ஜோடிகள் மீண்டும் ஒரு சொகுசு இல்லத்தில் தனியாக தங்க வேண்டும். மீண்டும் அவர்களுக்கு டாஸ்குகள் கொடுக்கப்படும். பாலியல் உணர்வுகள் கட்டுப்படுத்தி வெற்றி பெற்றவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். இந்த நிகழ்ச்சியினை நெட்பிளிக்ஸில் வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி தொடங்க உள்ளது என்பதும் இது குறித்த விளம்பரங்கள் தற்போது வெளியாகி டிரெண்டாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

தமிழகத்தில் இன்று 43 பேர்களுக்கு கொரோனா பாசிட்டிவ்: சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் இன்று மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1520

53 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பாசிட்டிவ்: அதிர்ச்சி தகவல்

கொரோனா பாதிப்பு குறித்த செய்திகளை சேகரிக்க செல்லும் பத்திரிகையாளர்கள் மற்றும் போட்டோகிராபர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கி வருவது குறித்து தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஒரு மருத்துவருக்கே இந்த நிலையா? நடிகர் விவேக்கின் உருக்கமான வீடியோ

கொரோனாவால் இறந்தது ஒரு மருத்துவராக கூட இருந்தால் கூட அவருடைய உடலை அடக்கம் செய்ய முடியாத சூழ்நிலைக்கு உள்ளாகி ரொம்ப வருத்தமாக உள்ளது. சைமன் என்ற நியூரோ சர்ஜன், இன்று கொரோனாவால் உயிரிழந்தார்

கொரோனா விடுமுறையில் பிரம்மாண்ட இயக்குனரின் பிரமாத செயல்  

இந்த கொரோனா விடுமுறையில் பல்வேறு திரையுலக பிரபலங்கள் விதவிதமான வீடியோக்களை தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பதும் இந்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன

உலகம் முழுவதும் ஆபத்தில் இருக்கும் சுகாதாரப் பணியாளர்கள்!!! WHO விதிமுறைகள்!!!

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு மத்தியில் கடுமையான பாதிப்புகளை உலகம் முழுவதும் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் அனுபவித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.