வில்லன் நடிகராக அறிமுகமாகும் இணை இயக்குனர்!

  • IndiaGlitz, [Thursday,November 19 2020]

வீடு மனைவி மக்கள், எங்க ஊரு காவல்காரன், பாண்டி நாட்டு தங்கம், பாட்டு வாத்தியார் உள்பட பல திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் டிபி கஜேந்திரன். இவர் பல படங்களில் காமெடி கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்தநிலையில் டிபி கஜேந்திரன் அவர்களிடம் உதவியாளராக இருந்த நிமல் என்பவர் தற்போது ’கால் டாக்ஸி’ என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் தனது கேரக்டர் குறித்து நிமல் கூறியதாவது:

நான் சிறு வயதிலிருந்தே நடிப்பின் மீது இருந்த ஆசையால் சென்னை வந்தேன். சென்னையில் எனக்கு கஜேந்திரன் சாரைத் தவிர வேறு யாரையும் தெரியாது. இதனால் அவரை என் நிலைமையை எடுத்துக் கூற முதலில் சினிமா பற்றி தெரிந்துகொள். அதற்கப்புறம் நடி என கூறி என்னை நம்பி மொத்த தயாரிப்பு பணிகளையும் கொடுத்தார்.

சினிமா உலகம் சார்ந்த சகலத்தையும் கற்றுக் கொடுத்த குரு அவர்தான். தற்போது என்னுடைய ஆசைபடி ’கால் டாக்ஸி’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் வில்லனாக நடித்துள்ளேன். இந்த படத்தை பா பாண்டியன் அவர்கள் இயக்கியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் அருணை பாலா இயக்கத்தில் ’அட்லி’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறேன். மேலும் ஏ ஆர் முருகதாசின் உதவி இயக்குனர் வி எஸ் செல்வதுரை இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

More News

2020 நிலைமைக்கு காரணம் ஒரு ஸ்பூன் அளவுதான்… கொரோனா குறித்து வெளியான திடுக்கிடும் தகவல்!!!

2020- இந்த அளவிற்கு மோசமாக இருக்கும் என்று உலகத்தில் யாருமே நினைத்து பார்த்திருக்க மாட்டர்கள்.

மணிக்கூண்டு டாஸ்க்: லக்சரி பட்ஜெட்டுக்கு ஆப்பு வைத்த பிக்பாஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக மணிக்கூண்டு டாஸ்க் நடந்த நிலையில் இந்த டாஸ்க்கில் 5 அணிகளாக பிரிக்கப்பட்டனர். இதில் அர்ச்சனா மற்றும் ஷிவானி

தேவை இல்லாம கேள்வி கேட்காதிங்க: நிருபரிடம் பொங்கிய முதல்வர்

பெருமை பேசுகிறீர்கள் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் நிருபர் ஒருவர் கேள்வி கேட்டதை அடுத்து பொங்கி எழுந்த முதல்வர் ஆவேசமாக பதில் கூறிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது 

'பாலா மாமா, பாலா மாமா': ஷிவானியை கலாய்த்த ரம்யா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் புரமோவில் மணிக்கூண்டு டாஸ்க்கில் வெற்றி பெற்ற ஆறு பேர்கள் அடுத்த வார கேப்டன் போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் என அறிவிக்கப்பட்டது

வாய் பேசமுடியாத வயதில் இந்தியச் சாதனை… கலக்கும் நம்ம ஊரு சிறுவன்!!!

தேனி ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த 21/2 வயது சிறுவன் தன்னுடைய அபாரமான நினைவு ஆற்றலால் இந்திய அளவில் சாதனை சிறுவன் என்ற அடையாளத்தை பெற்றிருக்கிறான்.