ட்ரிம் செய்யப்பட்ட கமல்ஹாசனின் சாதனைப்படம்: இந்த முறை வெற்றி பெறுமா?

உலகநாயகன் கமல்ஹாசனின் சாதனை படம் ஒன்று கடந்த 2001ஆம் ஆண்டு வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் தற்போது அதே திரைப்படம் ட்ரிம் செய்யப்பட்டு ரிலீசாக இருப்பதாகவும் இந்த முறை கண்டிப்பாக வெற்றி பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், கலைபுலி எஸ் தாணு தயாரிப்பில், சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் உருவான திரைப்படம் ’ஆளவந்தான்’. இந்த படம் கடந்த 2001ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த படம் அதிக நீளம் உள்பட ஒருசில காரணங்களால் ரிலீஸ் ஆனபோது எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

ஆனால் அதே நேரத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் குறித்து இந்திய சினிமா அறியாத காலத்திலேயே இந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் அனைவரையும் பேச வைத்தது என்பதும், ஸ்பெஷல் எஃபெக்ட் பிரிவில் தேசிய விருது பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’ஆளவந்தான்’ படத்தை இரண்டு மணி நேரமாக ட்ரிம் செய்து வெளியிட தயாரிப்பு தரப்பு முடிவு செய்த நிலையில் அதற்கான பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்றது. இன்று கமல்ஹாசன் தனது 68வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் இன்று டிரிம் செய்யப்பட்ட ’ஆளவந்தான்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட இருப்பதாகவும் புதிய போஸ்டர் வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சுமார் ஒரு மணிநேரம் ட்ரிம் செய்யப்பட்ட ’ஆளவந்தான்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹீரோ, வில்லன் என இரண்டு வித்தியாசமான வேடங்களில் கமல்ஹாசன் நடித்த இந்த படத்தில் ரவீனா டண்டன் மற்றும் மனிஷா கொய்ராலா ஆகிய இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர்.

More News

என்னை மகிழ்விக்க நானே போதும், ஆண் துணை தேவையில்லை: அஜித், விஜய் பட நடிகை

 அஜித், விஜய் உள்பட பல முன்னணி நடிகர்கள் நடித்த படங்களில் நடித்த நடிகை என்னை மகிழ்வித்து கொள்ள நானே போதும் என்றும் எனக்கு ஆண் துணை தேவை இல்லை என்றும் வீடியோ ஒன்றில் கூறியிருப்பது

உலகில் எதுவும் இலவசம் இல்லை, டுவிட்டருக்கு கட்டணம் வசூலிப்பது சரிதான்: பிரபல நடிகை

டுவிட்டரில் புளூடிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மாதம் 8 டாலர் கட்டணம் வசூலிக்கப்படும் என அந்நிறுவனத்தை சமீபத்தில் வாங்கிய எலான் மஸ்க் அறிவித்த நிலையில் எதுவுமே உலகில் இலவசம் இல்லை

'வாத்தி' படத்தின் சிங்கிள் அப்டேட்: பாடலை எழுதியது இந்த பிரபலமா?

தனுஷ் நடித்த 'வாத்தி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும்

2 நாட்களில் பட்ஜெட்டை விட 2 மடங்கு வசூல் செய்த லவ் டுடே.. இயக்குனருக்கு வலைவீசும் பிரபலங்கள்

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த 'லவ் டுடே' என்ற திரைப்படத்தின் இரண்டு நாள் வசூல் இந்த படத்தின் மொத்த பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயிஷா போயிருவாங்க.. தனலட்சுமியின் பதிலை அடுத்து கமல்ஹாசனின் அதிரடி!

ஆயிஷா எவிக்ட் ஆகி இந்த நிகழ்ச்சியிலிருந்து போயிருவாங்க.. என்று தனலட்சுமி கூறியதை அடுத்து கமல்ஹாசன் அதிரடியாக இந்த வாரம் எலிமினேட் ஆகும் நபரின் பெயரை அறிவித்துள்ளார்.